காமன்வெல்த் பளுதூக்குதல்போட்டியில்,4 தங்கப்பதக்கங்கள்பெற்ற இந்தியா.
சமோவா நாட்டின் அபியா நகரில் காமன்வெல்த் இளையோர், ஜூனியர் மற்றும் சீனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இந்திய வீரர் சுனில் சிங் 2-வது நாளில் நடந்த ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் 'ஸ்னாட்ச்' முறையில் 126 கிலோ, 'கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 145 கிலோ என மொத்தம் 271கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கத்தை வென்றார். இந்திய வீரர் அபினோப் கோகோய் 71கிலோ எடைப் பிரிவில் மொத்தம் 284 கிலோ (ஸ்னாட்ச்-129, கிளீன் அண்ட் ஜெர்க்-155) எடையை தூக்கி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்திய வீராங்கனை அய் சங்பா கோகோய் பெண்களுக்கான 58 கிலோ எடைப்பிரிவில் ,மொத்தம் 185 கிலோ எடை தூக்கி (ஸ்னாட்ச்-79, கிளீன் அண்ட் ஜெர்க்-106) தங்கப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.
இந்திய வீரர் சாரு பேசி சீனியர் பிரிவில் ஆண்களுக்கான 65கிலோ எடைப்பிரிவில் 289 கிலோ எடைதூக்கி (ஸ்னாட்ச்-127, கிளீன் அண்ட் ஜெர்க்-162) தங்கப் பதக்கம்வென்றார்.
0
Leave a Reply