25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >>


சோதனைகளை கடந்து சாதித்த இந்திய சாதனையாளர்கள்  ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்று அசத்தல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சோதனைகளை கடந்து சாதித்த இந்திய சாதனையாளர்கள் ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்று அசத்தல்.

ஜப்பானின் அய்ச்சி–நகோயாவில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வறுமை, காயம் உள்ளிட்ட பல்வேறு தடைகளைக் கடந்து இந்திய நட்சத்திரங்கள் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

இந்தியா 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 86 பதக்கங்களைக் குவித்து பதக்கப் பட்டியலில் 4-வது இடம் பிடித்தது. இதில், கடினமான சூழ்நிலைகளையும் சவால்களையும் எதிர்கொண்டு இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த சில வீராங்கனைகள்...

வித்யா – தடகளம்

தமிழகத்தின் கோவை மாவட்டம், மதுக்கரையை அடுத்த வழுக்குப்பாறை மீனாட்சிபுரம், மாரியம்மன் கோவில் அருகே வசிப்பவர் வித்யா. இவரது தந்தை ராம்ராஜ்.

ஈரோடு அரசு விடுதியில் தங்கி பயிற்சி பெற்ற வித்யா, தனது விளையாட்டுப் பயணத்தை ஹாக்கியில் தொடங்கினார். பின்னர் தடகளத்திற்கு மாறினார்.

'டிரக்' டிரைவராக பணியாற்றிய அவரது தந்தை, மகளின் கனவை நிறைவேற்றுவதற்காக பல தியாகங்களை செய்தார். இரவு நேரங்களில் பிஸ்கட், டீ மட்டும் அருந்தி, பணத்தைச் சேமித்து மகளுக்குத் தேவையான 'ஷூ'வை வாங்கிக் கொடுத்தார்.

ஆசிய விளையாட்டில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் பங்கேற்ற வித்யா, பி.டி.உஷாவின் 42 ஆண்டுகால சாதனையை முறியடித்து அசத்தினார். மேலும், 400 மீட்டர் தடை ஓட்டத்தை 55 வினாடிகளுக்குள் கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். அவர் பந்தயத்தை 54.75 வினாடிகளில் நிறைவு செய்தார்.

பரணிகா – போல் வால்ட் வெண்கலம்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் போல் வால்ட் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார் பரணிகா.

'ரிஸ்க்' நிறைந்த இந்தப் போட்டியில் அவர் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்க சாதனையாகும். தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தைச் சேர்ந்த பரணிகா, விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.

6 வயதிலேயே தடகளத்தில் காலடி எடுத்து வைத்தார். தொடக்கத்தில் நீளம் தாண்டுதல், 'டிரிபிள் ஜம்ப்' உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்ற அவர், பின்னர் போல் வால்ட் போட்டிக்கு மாறினார்.

தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட பரணிகா, “உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய போட்டிதான் இது. காலில் காயம் ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்து ஆசிய விளையாட்டில் சாதித்தேன்,” என்றார்.

அபிநயா – 4x100 மீட்டர் தொடர் ஓட்டம் வெண்கலம்

தமிழகத்தின் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்தைச் சேர்ந்தவர் அபிநயா. இவரது தந்தை ராஜராஜன், கல்குவாரி தொடர்பான பொருட்களை விற்பனை செய்யும் சிறு வியாபாரி.

அபிநயாவின் தடகளப் பயிற்சிக்காக அவரது குடும்பம் திருநெல்வேலிக்கு இடம்பெயர்ந்தது. 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்று வந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆசிய உள்ளரங்கப் போட்டியில் 60 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்றபோது, தடுப்பு சுவரில் மோதி முழங்கால் மற்றும் கணுக்காலில் பலத்த காயம் அடைந்தார்.

ஐந்து மாதங்கள் கடுமையாகப் போராடி காயத்திலிருந்து மீண்ட அபிநயா, ஆசிய விளையாட்டில் 4x100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் மட்டும் பங்கேற்றார். அதிலும் சிறப்பாக ஓடி இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.

வறுமை, காயம், தடைகள் என எதுவும் இவர்களின் வெற்றிப் பயணத்தைத் தடுக்கவில்லை. விடாமுயற்சியும் நம்பிக்கையும் இருந்தால் தடைகளைக் கடந்து சாதிக்க முடியும் என்பதற்கு இவர்கள் சிறந்த முன்னுதாரணங்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News