பெண்கள் கிரிக்கெட்டில் தங்கம் வென்ற இந்திய சிங்கப்பெண்கள்.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் 20வது சீசனில், பெண்கள் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது.
நேற்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதிரடியாக விளையாடிய இந்திய வீராங்கனைகள், 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் குவித்தனர். இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
சவாலான 217 ரன்கள் இலக்கை துரத்திய இலங்கை அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 15.4 ஓவர்களில் 69 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்திய அணி அபார வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.
0
Leave a Reply