இந்திய வம்சாவளியை சேர்ந்த கெவன் பரேக் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்
இந்திய வம்சாவளியை சேர்ந்த 62 வயதாகும் கெவன் பரேக், 2013ம் ஆண்டு, ஆப்பிள் நிறுவனத்தில், நிதி திட்டமிடல் மற்றும் ஆய்வுக்குழுவின் துணை தலைவராக பணிக்குச் சேர்ந்தார். அதற்கு முன்னதாக, 'தாம்சன் ராய்ட்டர், ஜெனரல் மோட்டார்ஸ்' நிறுவனங்களில் பல்வேறு பொறுப்புகளை திறம் பட கையாண்டுள்ளார்.
மிச்சிகன் பல்கலையில் மின்சார பொறியியல் படிப்பை முடித்த அவர், சிக்காகோ பல்கலையில் எம்.பி.ஏ., பட்டமும் பெற்றுள்ளார்.ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை நிதி அதிகாரியாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த கெவன் பரேக் நியமிக்கப்பட்டு உள்ளார்."கெவனின் அறிவாற்றல், கணிப்பு, நிதித் துறை சார்ந்த நிபுணத்துவம் ஆகியவை, அவரை ஆப்பிளின் அடுத்த சிறந்த சி.எப்.ஓ., தேர்வாக மாற்றி உள்ளது" என ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply