ஜூனியர் பெண்களுக்கான உலக கோப்பை ஹாக்கியில், இந்திய பெண்கள் அணிவெற்றி.
ஜூனியர் பெண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி சிலியின் சாண்டியாகோ நகரில், 24 அணிகள் 6 பிரிவுகளாக விளையாடுகின்றன.
முதல் போட்டியில் நமீபியாவை வென்ற இந்தியா, அடுத்து ஜெர்மனியிடம் தோற்றது. நேற்று தனது கடைசி போட்டியில் அயர்லாந்து அணியை சந்தித்து., முதல் பாதியில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
இந்தியாவுக்கு பெனால்டிகார்னர் வாய்ப்பில் இரண்டாவது பாதியில், கிடைக்க, இதை பூர்ணிமா கோலாக மாற்றினார். 57 வது நிமிடத்தில் இந்தியாவின் சாக்சி, ஒரு கோல் அடிக்க ,போட்டி முடிய ஒரு நிமிடம் இருந்த போது, பூர்ணிமா 2வது கோல் அடித்தார்.
முடிவில் இந்திய அணி 4-0 என வெற்றி பெற்றது. புள்ளிப்பட்டியலில் 6 புள்ளியுடன் உள்ளது., இந்திய அணியின் காலிறுதி வாய்ப்பு, மற்ற போட்டிகளின் முடிவுக்கு ஏற்ப தெரிய வரும்.
0
Leave a Reply