இந்தியாவின் லவ்லினா, சச்சின் எலைட் குத்துச் சண்டை தொடரில் தங்கம் வென்றனர்.
எலைட் சர்வதேச குத்துச்சண்டை தொடர் ஸ்பெயினில், பெண்களுக்கான 75 கிலோ எடைப் பிரிவு பைனலில் இந்தியாவின் லவ்லினா, இங்கிலாந்தின் மேரி - கேட் ஸ்மித் மோதி லவ்லினா, 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.
பிரியா (60 கிலோ), அருந்ததி சவுத்ரி (70), நைனா (80), மஞ்சு ராணி (48),நீது கங்காஸ் (51), பூனம் (54) பெண்களுக்கான மற்ற எடைப்பிரிவு பைனலில் தங்கம் கைப்பற்றினர். மற்றொரு இந்திய வீராங்கனை பிரீத்தி பவார் (54 கிலோ) வெள்ளி வென்றார்.
ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவு பைனலில்இந்தியாவின் சச்சின், கனடாவின் கியோமா அலி அல் அஹ்மதியே மோதி, ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவு பைனலில்,சச்சின் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தை வென்றார். மற்றொரு பைனலில் (75 கிலோ) இந்தியாவின் ஆகாஷ் 3-2 என, கஜகஸ்தானின் அமன் கோன்ஸ்பெ கோவை தோற்கடித்தார்.
9 தங்கம், 3 வெள்ளி, 7 வெண்கலம் என, 19 பதக்கம் இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்தது.
0
Leave a Reply