இந்தியாவின் ஹரிஹரன், அர்ஜுன் ஜோடி,மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
மலேசிய 'மாஸ்டர்ஸ் சூப்பர் 500' பாட்மின்டன் தொடர் "கோலாலம்பூரில் ,நேற்று ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருணன், அர்ஜுன் ஜோடி, இத் தொடரின் 'நம்பர்-7' அந்தஸ்து பெற்ற பிரான்சின் கிறிஸ்டோபோபோவ், டோமா போபோவ் சகோதரர்கள் ஜோடியை எதிர் கொண்டது.
முதல் செட்டை இந்திய ஜோடி 21-19 என கைப்பற்றியது. தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் சிறப்பாக செயல்பட 21-15 என எளிதாக வசப்படுத்தியது. 36 நிமிடம் நடந்த போட்டி முடிவில் இந்திய ஜோடி 21-19, 21-15 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தது.
இந்தியாவின் அஷ்மிதா ,பெண்கள் ஒற்றையர் தகுதிச் சுற்றில் 21-23, 21-16, 21-16 न செட் கணக்கில் சீன தைபேவின் பாய் யு போவை வீழ்த்தி, பிரதான சுற்றுக்கு முன்னேறினார்.
இந்தியாவின் சாத்வித் ரெட்டி கனபுரம், ராதிகா சர்மா ஜோடி கலப்பு இரட்டையர் தகுதிச் சுற்றில் 21-15, 21-17 என மலேசியாவின் தது ஆனிப், கிளாரிசா ஜோடியை வென்றது.
0
Leave a Reply