25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


யூத் விளையாட்டு பளுதுாக்குதலில்,தங்க பதக்கத்தை வென்றார் இந்தியாவின் பிரிதீஸ்மிதா போய்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

யூத் விளையாட்டு பளுதுாக்குதலில்,தங்க பதக்கத்தை வென்றார் இந்தியாவின் பிரிதீஸ்மிதா போய்.

ஆசிய யூத் விளையாட்டு பஹ்ரைனின் மனாமா நகரில் ,40 நாடுகளின் 8000க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான பளுதுாக்குதல் 44 கிலோ பிரிவில் இந்தியாவின்  பிரி தீஸ்மிதா போய் 16, பங்கேற்றார். 

பிரி தீஸ்மா 'ஸ்னாட்ச்' பிரிவில் 66 கிலோ துாக்கி, 2வது இடம் பிடித்துவெள்ளி வென்றார். யூத் பிரிவில் தனது தேசிய சாதனையை முறியடித்தார். இதற்கு முன்காமன்வெல்த் சாம் பியன்ஷிப் போட்டியில் 63 கிலோ தூக்கி இருந்தார்.

ஒடிசா வீராங்கனை பிரிதீஸ்மிதா, 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் அதிகபட்சமாக 92 கிலோ தூக்கி, தங்க பதக்கத்தை வென்று உலக  சாதனை படைத்தார்.ஏற்கனவே கடந்த ஆண்டு யூத் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான 40 கிலோ பிரிவில் உலக சாதனை (76 கிலோ) படைத்தி ருந்தார். ஒட்டுமொத்தமாக 158 கிலோ துாக்கிய இவர், முதலிடத்தை கைப்பற்றினார்.

இந்தியாவின் பூமிகா  பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தின் பைனலில், இலக்கை 24.43 வினாடியில் கடந்து,   3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.

இதுவரை 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண் கலம் என, 20 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, பதக்கப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. முதலி டத்தில் சீனா (28 தங்கம், 19 வெள்ளி, 8 வெண்கலம்) தொடர்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News