உலக குத்துச்சண்டை 'பியூச்சர்ஸ்' கோப்பை தொடரில் பெண்களுக்கான 57 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ராதாமணி லாங்ஜம், வெற்றி பெற்றார்.
உலக குத்துச்சண்டை 'பியூச்சர்ஸ்' கோப்பை (19 வயது)தொடர் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், பெண்களுக்கான 57 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ராதாமணி லாங்ஜம், 5-0 என இங்கிலாந்தின் சியோபன் ஹேலியை வென்றார். இந்திய வீராங்கனை குஞ்சன் 5-0 என, (48 கிலோ) அஜர்பைஜானின் குலார் ஹுசேனோவாவை மற்றொரு காலிறுதியில் வென்றார்.
இந்திய வீராங்கனைகள் ஜாய் ஸ்ரீ தேவி சிரோம் (54 கிலோ), சந்திரிகா பூஜாரி (51 கிலோ), இந்திய வீரர் அம்பேகர் (50 கிலோ) மற்ற காலிறுதியில் வெற்றிபெற்றனர்.
0
Leave a Reply