மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரில்இந்தியாவின் உன்னதி ஹூடா இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில், பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா 18, ஐக்கிய அரபு எமிரேட்சின் பிரகிருதி பாரத் மோதினர். உன்னதி 21-12, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் தான்வி சர்மா 21-8, 17–21, 21-18 என, ஜப்பானின் அனா இவாகியை வென்றார்.
இந்தியாவின் அனுபமா 21-14, 21-13 என இந்தோனேஷியாவின் தலிலா அக்னியா புடேரியை வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
0
Leave a Reply