அதிகளவில் லாபம் பெற ஊடுபயிர்
ஒரு பயிரை மட்டும் உற்பத்தி செய்தால் அதிகளவில் லாபம் பெற முடியாது. எனவே, ஒரு மடங்கு நிலம், இரு மடங்கு உற்பத்தி, மும்மடங்கு லாபம் என்ற விகிதத்தில் ஒரு நிலத்தில் முக்கிய பயிர், ஊடுபயிர், வரப்பு பயிர், சால் பயிர் என்று சாகுபடி செய்தால் அதிகளவவில் லாபம் பெற முடியும்.ஊடுபயிர் என்பது பயிருக்கு ஒரு பாதுகாப்பு அரணாக, நோய் மற்றும் பூச்சி தாக்குதல்களை தடுக்க, ஈரப்பதம் காக்க, மண் வளத்தை அதிகரிக்க, ஊடுபயிர் சாகுபடி உதவுகிறது. ஊடுபயிரிலிருந்து40 சதவீதம் வருமானம் கிடைக்க வழி செய்கிறது.
ஊடு பயிர்களால் முக்கிய பயிருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. முக்கிய பயிருக்கு வரும் இடையூறுகளை(நோய்கள், பூச்சிகள்) தடுக்க பயன்படுகிறது. அதேநேரத்தில் குறைந்த இடத்தில் அதிக வருமானம் தருகிறது. அதன் இலை, தழைகள், கால்நடைகளுக்கு உணவாக பயன்படுகிறது. மேலும் நிலத்தின் மண் வளத்தை பேணி தழைச்சத்து, தன் வேர் முடிச்சுகளின் மூலம் கிரகித்து மண்ணை வளப்படுத்துகிறது.
ஒவ்வொரு முக்கிய பயிருக்கும், ஒவ்வொரு விதமான ஊடுபயிர் சாகுபடி செய்யப்படுகிறது. பருத்தியில் ஊடுபயிராக உளுந்து, பாசி, தட்டை, வெண்டை, கொத்தவரை சாகுபடி செய்யலாம்.வரப்பு பயிராக சூரியகாந்தி, செண்டு மல்லி சாகுபடி செய்யலாம். பருத்திக்கு முழுப்பயிர் பாதுகாப்பு அரணாக இவை இருக்கிறது. நிலக்கடலையில், துவரை, உளுந்து போன்றவைகளை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.சூரியகாந்தி வயலை சுற்றி சோளம், கம்பு போன்றவற்றை வரப்பு பயிராகவும், ஊடுபயிராகவும் சாகுபடி செய்யலாம்.தென்னையில் ஊடுபயிராக சணப்பு, கொழுஞ்சி, கொக்கோ சாகுபடி செய்தால் அவை நிலத்திற்கு உரமாவதுடன் அதன் விதைகளை சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்யலாம்
0
Leave a Reply