ஐ.எஸ்.எல் கால்பந்து 12வது சீசன்.
. 12வது சீசன் ஐ.எஸ்.எல்., கால்பந்து போட்டியில்,மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.லீக் போட்டியில் நேற்று, கோல்கட்டாவில் ஈஸ்ட் பெங்கால், வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதின. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் ஈஸ்ட் பெங்கால் அணிக்கு யூசுப் எஸ்செஜ் ஜாரி (65,70வது நிமிடம்) 2 கோல் அடித்தார். ஈஸ்ட் பெங்கால் அணிக்கு 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+2வது நிமிடம்) மிகுவல் பிகு வேரா ஒரு கோல் அடித்தார். வடகிழக்கு யுனைடெட் அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் ஈஸ்ட் பெங்கால் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மும்பையில் நடக்க வுள்ள லீக் போட்டியில்,பிப். 19ல் மும்பை, சென்னை அணிகள் மோதுகின்றன.
0
Leave a Reply