25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


Jagatpita Brahma Temple - ஜகத்பிதா பிரம்மா கோயில்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

Jagatpita Brahma Temple - ஜகத்பிதா பிரம்மா கோயில்

படைப்புக் கடவுள் பிரம்மா உயிரினங்களை படைக்கும்போதே அவரவர் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தலை எழுத்தை எழுதி அனுப்புகிறார் எனப் புராணங்கள் கூறுகின்றன. சிவனின் அடி முடி காணும் போட்டியில் இவர் பொய் சொன்னதால், இவரது தலையெழுத்தை சிவன் தீர்மானித்தார். கோவில் இல்லாக் கடவுளாக இருக்கும்படி சபித்தார். ஆனாலும் ஒரு சிலப் பகுதிகளில் பிரம்மாவுக்கு சிவன் கோவில்களில் சிறிய அளவில் சன்னிதிகள் உண்டு. குறிப்பாக, தென்னகத்தில் இவறுக்கென சிறிய அளவிலான கோவில்கள் சில காணப்படுகின்றன. இப்படி ஒருசில கோவில்களிலேயே காணப்படும் பிரம்மாவிற்கு என பெரிய அளவிலான கோவில் ஒன்றும் உள்ளது, ராஜஸ்தானில் அமைந்துள்ள இந்த கோயில் 2000 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது. வடஇந்திய மாநிலங்களில் ராஜஸ்தானின் சுற்றுலாத் தலங்களிலேயே தற்போது பிரசிதிபெற்றிருப்பது புஷகர் நகரம். இங்கேதான் பிரம்மாவிற்கான பழம்பெரும் கோவில் உள்ளது.

ராஜஸ்தானின் அஜ்மேர் நகருக்கு அருகே உள்ள ஊர்தான் புஷ்கர். புஷ்கர கோவிலின் மூலவரே பிரம்மா தான். இந்தப் புஷ்கர் நகரில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் பெரியளவிலான திருவிழா கொண்டாடப்படுகிறது.இந்தப்புஷ்கர்நகரில்பிரம்மாண்டமான ஓர்ஏரியும்உண்டு.இதுசர்வதீர்த்தங்களுக்கும்ராஜாவானபுஷ்கரர்எனபக்தர்களால்போற்றப்படுகிறது இந்த கோயில் பிரம்மாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகச் சில கோயில்களில் ஒன்றாகும்.பிரம்மா, யாகம் செய்வதற்காக இடம் தேடி அலைந்தபோது, ஓரிடத்தில் சிந்தனையில் மூழ்கியிருந்தார். அப்போது அவருடைய கையில் இருந்த மலர் தரையில் விழுந்து ஏற்பட்ட அழுத்தத்தால் மூன்று இடங்களில் நீரூற்று பீறிட்டது. அவற்றில் தோன்றியதுதான் புஷ்கர் ஏரி, மத்திய புஷ்கர் ஏரி, கனிஷ்ட புஷ்கர் ஏரி என்ற மூன்று தீர்த்தங்களை உருவாக்கியது. அவற்றில் ஒன்று தான் பிரம்மா வேள்வி செய்த புஷ்கர். புனிதமாகக் கருதப்படும் புஷகர் ஏரியில் 52 படித்துறைகள் உள்ளன. இங்கு பக்தர்கள் எந்த நேரமும் புனித நீராடுவார்கள்.புஷ்கர் பகுதியில் நான்முகன் உலக நன்மைக்காக ஒரு யாகம் செய்ய திட்டமிட்டார். அதற்கு முன்னதாக யாகத்தை கொடியவர்களிடமிருந்து காக்க வடக்கே நீலகிரியையும், தெற்கே ரத்னகிரியையும், கிழக்கே சூர்யகிரியையும், மேற்கே சோன்சூர் என மலைகளை அரணாக அமைத்து யாகத்தையும் செய்து முடித்தார்.

 யாகத்தில் பிரம்மாவின் மனைவியான சரஸ்வதி தேவி ஆஹூதி தரவேண்டிய நேரம் நெருங்கியமு. சரஸ்வதி தேவியோ அவ்விடத்தில் இல்லை. அவரின்றி இந்த கடுமையான யாகம் தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக அங்கிருந்த காயத்ரியை திருமணம் செய்து தனது யாகத்தை நிறைவு செய்தார் பிரம்மா. இதனிடையே அங்கு வந்த சரஸ்வதியோ கடுங்கோபத்தில் பிரம்மாவிற்கு இவ்வுலகில் வேறெங்குமே வழிபாடு இருக்கக் கூடாது என சபித்தார். மேலும் திருமணமான ஆண்கள் இத்தலம் வந்து வழிபட்டால் தோஷங்ம கொள்வார்கள் என்றும் சபித்தார். ஆனால், பிரம்மாவுக்கு புஷ்கரைத் தவிர வேறெங்கும் வழிபாடு இருக்காது என்றும், புஷ்கருக்கு வந்து வழிபடும் ஆண்களுக்கு எந்த தோஷமும் ஏற்படாது என்றும் சரஸ்வதியின் சாபத்தைச் சற்றே மாற்றியமைத்தார் காயத்ரிதேவி. இதனால் மேலும் கோபமடைந்த சரஸ்வதி அந்த இடத்தைவிட்டு வெளியேறி ரத்னகிரி மலையில் சாவித்ரி ஜர்னா என்னும் நீரூற்றாக உருவெடுத்து உள்ளது.

புஷ்கரில் அமைந்துள்ள பிரம்மா கோவில் சிறப்பு நிறத்தில், கோபுர‌ங்களுடன் fட்சியளிக்கிறது. நுழைவுவாயிலில் நான்முகனின் வாகனமான அன்னம் அழகுடன் காட்சியளிக்கிறது. மூலவர் கருவறையில் பிரம்மா, காயத்ரி தேவியுடன் அருள்பாலிக்கிறார். பிரம்மா ஆலயத்தின் பின்புறம் உள்ள மலையின் மீது சரஸ்வதிக்கான கோவில் உள்ளது.ராஜஸ்தானில் இருந்து தெகனா - பெருந்தா சாலை வழியாக சுமார் 79 கிலோ மீட்டர் பயணித்தால் புஷ்கர் பிரம்மா கோவிலை அடையலாம். லம்போலய் சாலை வழியாக பயணித்தால் 114 கிலோ மிட்டர் பயணிக்க வேண்டும். மாநிலத்தில் பிரசித்தாமன ஆன்மீகத் தலம் என்பதால் எப்பகுதியில் இருந்தும் இக்கோவிலுக்கு வர பேருந்து வசதிகளும், தனியார் போக்குவரத்து வசதிகளும் உள்ளது. இதனருகே ஜெய்பூர் விமான நிலையம் சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவிலும், அஜ்மேர் ரயில் நிலையம் சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News