ஊட்டச்சத்துகளின் குவியல் முருங்கைக் கீரை!
உலகின் மருத்துவக் குணம்மிக்க காய்கறிகளுள் முன்னணியில் இருக்கிறது முருங்கை.
முருங்கையின் இலை, காய், விதை, பட்டை என எல்லாமும் அதீத பலன் தரக்கூடியவை. அவற்றில் பல்வேறு அத்தியாவசிய ឈប់ សំ (Phytochemicals) இருப்பதால் ஊட்டச்சத்து மிகுந்ததாக விளங்குகிறது. மற்ற காய்கறிகளைவிடப் பல மடங்கு ஊட்டச்சத்து மதிப்புகளையும் கொண்டிருக்கிறது. எந்த அளவுக்கு என்கிறீர்களா?
முருங்கை இலையில் ஆரஞ்சுப்பழத்தை விட 7 மடங்கு அதிக வைட்டமின் சி உள்ளது.
கேரட்டை விட 10 மடங்கு அதிக வைட்டமின் ஏ நிறைந்தது.
பாலை விட 17 மடங்கு அதிக கால்சியம் முருங்கையில் இருக்கிறது.
யோகர்ட்டை விட 9 மடங்கு அதிக புரதம் கொண்டிருக்கிறது.
வாழைப்பழத்தை விட 15 மடங்கு அதிக பொட்டாசியம் நிறைந்துள்ளது.
கீரையை விட 25 மடங்கு அதிக இரும்புச்சத்து முருங்கை இலையில் உள்ளது.
0
Leave a Reply