காரட் அல்வா
தேவையான பொருட்கள் - காரட் நீளமான - 1கிலோ ,பால் - 800 மி.லி, சீனி - 1கிலோ,நெய் (அ) டால்டா - 400 கிராம் , ஏலம், கிராம்பு-சிறிதளவு, முந்திரிப்பருப்பு - சிறிதளவு
செய்முறை-காரட்டை கழுவி சுத்தம் செய்து துருவி வைத்துக் கொள்ளவும். கனமான பாத்திரத்தில் பாலில் கேரட் துருவலை மிதமான தீயில் 10 நிமிடம் வேக விடவும். பால்வற்றி சீனியைப் போட்டு கிளறி விடவும். அடுப்பை வருகையில் சீனியை சிறியதாக எரியவிடவும். விடாமல் கிள்றிக் கொண்டே இருக்கவும். அல்வா பதத்தில் வரும்போது டால்டா(அ) நெய் சேர்க்கவும். ஏலம், கிராம்பு பொடி செய்து போடவும். அல்வா நன்றாக திரண்டு வந்தபின் நெய் அல்லது டால்டா தடவிய தட்டில் கொட்டி மேலே வறுத்த முந்திரிப்பருப்பையும் போடவும்.
0
Leave a Reply