ராஜபாளையம் சஞ்சீவி மலை குமாரசாமி கோயிலில் கார்த்திகை தீபம்
ராஜபாளையத்தில் திருக்கார்த்திகையை முன்னிட்டு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஆற்றில் நீர் வரத்தை அடுத்து பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி மறுத்ததால் ஏமாற்றம் அடைந்தனர்..ஆற்றின் முன்பே முடி காணிக்கை, பொங்கலிட்டு பாதுகாப்பு வேலியில் மாலையிட்டு விளக்கேற்றி தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்தினர்.சிவானந்த பரமஹம்சர் ஆசிரமத்தில் நடந்த அன்னதானத்தில்10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று திரும்பினர்.மாலையில் சஞ்சீவி மலை முருகன் கோயிலில் நடந்த படி பூஜையில் பங்கேற்று கோயில் உச்சியில் ஏற்றிய கார்த்திகை தீபத்தில் பங்கேற்றனர்.
0
Leave a Reply