கட்டா குஸ்தி 2' ரூ.55 கோடி வசூல்: ரசிகர்களுக்கு விஷ்ணு விஷால் நன்றி .
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடித்த 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் உலகளவில் ரூ.55 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றி நடைபோட்டு வருகிறது.
இதையடுத்து நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட பதிவில், "ரூ.50 கோடியைத் தாண்டிய எனது முதல் படம் இது. மறக்க முடியாத தருணம். இந்த வெற்றியை கொண்டாடிய அனைத்து ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் எனக்கு மிகப்பெரிய பலம். இனியும் சிறந்த கதைகளைத் தேர்வு செய்து உங்களை மகிழ்விக்க தொடர்ந்து உழைப்பேன்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply