லக்ஷயா சென் மலேசிய ஓபன் பேட்மிண்டன்முதல் சுற்றில் வெற்றி.
கோலாலம்பூரில் ரூ.13 கோடி பரிசுத் தொகைக்கான மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்ஷயா சென் 21-16, 15-21, 21-14 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரின் ஜியா ஹங் ஜாசன் டெக்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி 21-12, 21-17 என்ற நேர்செட்டில் பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற லீஜிஜியாவை (மலேசியா) தோற்கடித்தார்.
இந்திய வீராங்கனை மாள்விகா பான்சோத்பெண்கள் ஒற்றையரில் 11-21, 11-21 என்ற நேர்செட்டில் முன்னாள் உலக சாம்பியனான ராட்சனோக் இன்டானோனிடம் (தாய்லாந்து) தோற்று வெளியேறினார்.
இந்தியாவின் எம்.ஆர். அர் ஜூன்- ஹரிகரன் அம்சகருணன் இணை 10-21, 20-22 என்ற நேர் செட்டில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஜப்பானின் ஹிரோகி மிடோரிகவா- கோஹியமாஷிதா ஜோடியிடம் தோற்றனர்.
0
Leave a Reply