25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


35 வயதுக்குட்பட்ட இந்திய பணக்கார பிரபலங்கள் பட்டியல்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

35 வயதுக்குட்பட்ட இந்திய பணக்கார பிரபலங்கள் பட்டியல்

இந்தியாவில்35 வயதுக்கு உட்பட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலை ஹூருன் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட்(HuronResearchInstitute) வெளியிட்டுள்ளது.

ஹூருன் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட்(HuronResearchInstitute) வெளியிட்டுள்ள35 வயதுக்கு உட்பட்ட இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் 150 கோடீஸ்வரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதில், 29 இளம் கோடீஸ்வரர்களுடன் பெங்களூரு முதலிடத்தை பிடித்துள்ளது. இவர்களுக்கு 100 மில்லியன் டொலர் முதல் 500 மில்லியனுக்கும் அதிகமாகச் சொத்து உள்ளது என்பதை குறிக்கிறது.

இதில், தேர்டு வேவ் காபி(ThirdWaveCoffee) உரிமையாளர்கள் சுஷாந்த் கோயல், ஆயுஷ் பத்வால், ரேஸர்பே உரிமையாளர் சஷாங்க் குமார், மீஷோ (Meesho) உரிமையாளர்கள் விதித் அத்ரே, சஞ்ஜீவ் பன்ர்வா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த பட்டியலில்26 இளம் கோடீஸ்வரர்களுடன் மும்பை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் ஷேர்சாட் உரிமையாளரான 31 வயது அங்குஷ் சச்சிதேவ் (Ankush Sachdeva) மிகவும் இளம் கோடீஸ்வரராக அறியப்பட்டுள்ளார்.

இந்த பட்டியலில் , இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, பரிதா பாரிக் ஆகியோர் 32 வயது பெண் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.

இந்த பட்டியலில் மொத்தம்7 பெண் கோடீஸ்வரர்கள் இடம் பிடித்துள்ளனர். இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி.,யில் படித்த 13 பேரும், மும்பை ஐ.ஐ.டி.,யில் 13 பேரும் இடம்பெற்றுள்ளனர்.    

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News