25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


கல்லீரல் பாதிப்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கல்லீரல் பாதிப்பு

நமதுஉடலின் இரண்டாவது பெரிய உறுப்பு கல்லீரல். இதுகழிவுகளை வெளியேற்றவும், உணவை ஜீரணிக்கவும், ரத்தம் உறைவதற்கு உதவும் புரதங்களின் உற்பத்தியையும் செய்வதுடன் ஹார்மோன்களை சீர் செய்வது போன்ற பல வகையான வேலைகளை செய்கிறது. எனவேஇதயம், நுரையீரல், சிறுநீரகம்போன்ற உறுப்புகளுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை கல்லீரலுக்கும் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் உடலில் ஏற்படும்90 சதவீதநோய்களுக்கு கல்லீரலில் ஏற்படும் பிரச்சனைகள் தான் காரணமாகின்றன.உடலில் டீடாக்ஸ் பேக்டரியாக செயல்படும் கல்லீரல்,உடலின் கழிவுகளை வெளியேற்றுவதுடன், நமது செரிமான அமைப்பு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லீரலின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசித்து சிகிச்சை பெறவேண்டியது அவசியம். இல்லையெனில் கல்லீரல் செயலிழக்கும் அபாயம் ஏற்படலாம்.

கல்லீரல் பாதிப்புக்கான அறிகுறிகள்

கல்லீரலில் பிரச்சனை ஏற்படுமாயின் நச்சுக்கள் சரியாக வெளியேறாமல் வயிறு பெருத்து காணப்படுவதுடன் வயிற்றுப் பகுதியில் வீக்கமும் ஏற்படும். 

பாதங்கள் வீங்குதல், பாதங்களில் கூச்ச உணர்வு ஏற்படுவது போன்றவை தோன்றும்.

செரிமானத்தில் கல்லீரல் முக்கிய பங்கு வகிப்பதால், அது செயல்படாமல் இருக்கும்போது வயிற்றுப்போக்கு உண்டாகும்.

தோல் அரிப்பு, கை கால்கள் வீங்குவது போன்றவை உண்டாகும்.

கவனமின்மை, நினைவாற்றல் இழப்பு

பசியின்மை எடை இழப்பு, வயிற்று வலி, குமட்டல் போன்றவை ஏற்படும்.

கல்லீரல் நன்றாக இயங்க சாப்பிட வேண்டியவை:

நெல்லிக்காய், இஞ்சி, பீட்ரூட், மஞ்சள், திராட்சை , வால்நட் போன்றவை கல்லீரலை பாதுகாக்க உதவும்.

தினமும் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வதால் ஹெப்பாடிட்டிஸ்‌ பி மற்றும் சிஆகியவற்றிற்கு காரணமான வைரஸ்கள் பரவுவதை மஞ்சள் தடுக்கிறது.

கல்லீரல் நோய்க்கு பப்பாளி பழம் சிறந்த மருந்தாகும். பப்பாளி பழத்துடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து ஜூஸாக பருக நல்ல பலன் கிடைக்கும்.

கீரை சூப், கேரட் ஜூஸ் பருகலாம்.

அதிமதுரப் பொடியை டீத்தூளுடன் கலந்து, டீ தயாரித்து பருக சிறந்தது. சில கல்லீரல் நோய்களுக்கு அதிமதுரம் சிறந்த ஆயுர்வேத மருந்தாகும்.

கல்லீரல் சுத்தமாக, ஆப்பிள் சீடர் வினிகரை தினம் இருமுறை ஒரு கப் நீரில் ஒரு ஸ்பூன் அளவில் கலந்து பருகுவது நல்லது.

முட்டைகோஸ், வெங்காயம், பூண்டு, ப்ராக்கோலி, காலிஃபிளவர் போன்றவற்றில் உள்ள சல்ஃபர் என்சைம் உற்பத்தியை அதிகரித்து உடலின் நச்சுக்களை நீக்க உதவுகிறது.

ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் கல்லீரல் நோய்களுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து மற்றும் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் குணப்படுத்த முடியும். எனவேகல்லீரல் பாதிப்புக்கான அறிகுறிகள் தெரிந்தால் தகுந்த மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News