தாமரை விதை பாயசம்.
தேவையான பொருட்கள் – 1 கப் தாமரை விதை , அரைலிட்டர் பால்,
தேவையான அளவு மில்க்மெய்ட் அல்லது சர்க்கரை தேவையான அளவு
தேவையான அளவுநெய் , தேவையான அளவு முந்திரி திராட்சை , தேவையான அளவு பாதாம்
செய்முறை - ஸ்டவ் ஆன் செய்து ஒரு பாத்திரத்தில் பாலை நன்றாக காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.மற்றொரு ஸ்டவ்வில் ஒரு பாத்திரத்தில் தாமரை விதைகளை போட்டு சிறிது நெய் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.நன்றாக காய்ச்சிய பாலில் மில்க்மெய்ட் சேர்த்து தாமரை விதைகளை சேர்த்து நன்றாக கிளறவும்.
15 லிருந்து20 நிமிடம் வரை நன்றாக கொதிக்கவிடவும்.அதில் தேவையான அளவு மில்க்மெய்ட் அல்லது சர்க்கரை சேர்த்து இறக்கவும்.பின் ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரி பாதாம் திராட்சை நன்றாக வறுத்து எடுத்து அதில் கலந்து கொள்ளவும்.சுவையான தாமரை விதை பாயாசம் தயார்.
0
Leave a Reply