அருள்மிகு அஞ்சல்நாயகி உடனுறை மாயூரநாத சுவாமி திருக்கோவில் மஹாதேவாஷ்டமி அன்னதான அழைப்பிதழ்
நிகழும் மங்களகரமான கொல்லம் 1198-ஆம் ஆண்டு ஸ்ரீ சுபகிருது வருடம் மார்கழி மாதம் 1-ஆம் நாள் (16-12-2022) வெள்ளிக்கிழமை அஷ்டமி திதியும், உத்திர நட்சத்திரமும். சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் அன்று மஹாதேவாஷ்டமி பூஜை நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்து அபிஷேகம், அலங்காரம் நடைபெறும்.
மதியம் 11:00 மணியளவில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெறும், மாலை 4:30 மணிக்கு
அருள்மிகு காலபைரவருக்கு அபிஷேகமும், இரவு 7:30 மணிக்கு சிறப்பு பூஜையும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து பிரசாதம் வழங்கப்படும். ஆகையால் அனைத்து சிவனடியார்களும், ஆன்மீகச் சான்றோர்களும் அனைத்து பக்த மெய்யன்பர்களும் கலந்து கொண்டு, தெய்வங்களின் திருவருளைப் பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
திருக்கோயில் நிர்வாகம்
செயல் அலுவலர்
M.K.முத்துராஜா, பி.காம்., பி.எல்.,
இரா.ராஜா, எம்.ஏ., பி.எல்.,
0
Leave a Reply