விருதுநகர் - சிவகாசி மற்றும் சிவகாசி - திருத்தங்கல் ரெயில்வே இருப்பு பாதையில் நாளை 22.12.2023 அன்று அறிவிக்கப்பட்டிருந்த பராமரிப்பு பணிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது - இரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
விருதுநகர் - சிவகாசி ரெயில்வே இருப்பு பாதை மற்றும் சாத்தூர் - விருதுநகர் நெடுஞ்சாலையை இணைக்கும் எல்.சி எண்:407 Rly KM: 541/200-300 (விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள சாத்தூர் லெவல் கிராஸிங் கேட் ) என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதையிலும்,சிவகாசி - திருத்தங்கல் ரெயில்வே இருப்பு பாதை எல்.சி எண்:424 Rly KM: 559/700-800 என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதையிலும், 22.12.2023 அன்று காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், அந்த வழிதடங்களை மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.
தற்போது மழையின் காரணமாக பராமரிப்பு வேலைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும், பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட வழிகளை வழக்கம்போல் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
0
Leave a Reply