'மேக் இன் இந்தியா' 10 ஆண்டுகள் நிறைவு
கடந்த 2014ம் ஆண்டு, செப்டம்பர் 25ம் தேதி துவங்கப்பட்ட 'மேக் இன் இந்தியா' திட்டம். பத்தாண்டுகளை நிறைவு செய்துள்ளது. அன்னிய முதலீடுகளை ஈர்த்து, உள்நாட்டில் தயாரிப்பை ஊக்கப்படுத்தி, அதன் வாயிலாக வேலைவாய்ப்புகளை உருவாக்கி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதே இத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் வாகனம், மின்னணுவியல், ஜவுளி, பாதுகாப்பு உள்ளிட்ட 25 துறைகளில் கவனம் செலுத்தப்படுகிறது.
நாட்டு மக்களின் அயராத உழைப்பின் காரணமாக, இந்தியாவில் தயாரிப்போம் என்ற கனவு, ஒரு வலுவான இயக்கமாக மாறியுள்ளது. மேக் இன் இந்தியாவின் தாக்கம், இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்பதை காட்டுகிறது.
மேக் இன் இந்தியா திட்டத்தை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்வதில் இளைஞர்களின் பங்கு முக்கியமானது. தரமான பொருட்களை தயாரித்து வழங்க அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும். குறைபாடற்ற பொருட்களை தயாரிக்க வேண்டும் என்பதே நம் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.
உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதோடு நின்று விடாமல், தயாரிப்பு மற்றும் கண்டுபிடிப்புகளில் உலகின் வலுவான நாடாக உருவெடுக்க நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது , என
- பிரதமர் நரேந்திர மோடி கூறி யுள்ளார்.
0
Leave a Reply