25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இந்தியாவை உலுக்கிய  வயநாடு  நிலச்சரிவினால் மனிதம் பிறந்தது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவை உலுக்கிய  வயநாடு நிலச்சரிவினால் மனிதம் பிறந்தது

 இயற்கையே!!! 

இருப்பவன் சுரண்டியதற்கு!!!

 இல்லாதவனை மண் வாரி !!! 

சுருட்டி கொண்டாயோ!!! ஏன் !!

!இருப்பவனை கண்டு நீயும்!!! அஞ்சுகிறாயோ !!!

இல்லாதவனை நீயும் !!! ஏளனமாக பாக்கிறாயோ !

நான் கொண்ட ஆத்திரத்தில் உன்னை அழித்திடுவேன்!!! முடியவில்லை.  

ஏனென்றால்!!! நானும் இல்லாதவன் தான்.

இத்தகைய இருண்ட காலத்திலும் இதுபோன்ற நிஜ வாழ்க்கை சூப்பர் ஹீரோக்களால் கேரளாவின் புகழ் பிரகாசமாக ஜொலிக்கிறது. வயநாடு மக்களை உயிரை கொடுத்து காப்பாற்றிய இந்திய இராணுவம் நிலச்சரிவு மீட்பு பணியின் பொது ஓய்வு எடுக்க தங்களுக்கு கிடைத்த  கொஞ்சம் நேரத்தில் எந்த ஆடம்பர வசதி களும் இல்லாமல் தூங்கும் இந்திய ராணுவ வீரர்கள்.அனைத்து இராணுவ வீரர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

 ஹீரோக்களால் கேரளாவின் புகழ் பிரகாசமாக ஜொலிக்கிறது. வயநாடு மக்களை உயிரை கொடுத்து காப்பாற்றிய இந்திய இராணுவம் நிலச்சரிவு மீட்பு பணியின் பொது ஓய்வு எடுக்க தங்களுக்கு கிடைத்த  கொஞ்சம் நேரத்தில் எந்த ஆடம்பர வசதி களும் இல்லாமல் தூங்கும் இந்திய ராணுவ வீரர்கள்.அனைத்து இராணுவ வீரர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டையே ஒரு சம்பவம் உலுக்கி உள்ளது. அது என்னவென்றால் காடு தான் உலகம். குகை தான் வீடு. 21ம் நூற்றாண்டிலும் பழங்களை தின்று கற்கால வாழ்க்கை நடத்திய 4 குழந்தைகள் உள்பட 6 பேர் அடங்கிய ஆதிவாசி குழந்தைகளை மீட்டது தான்தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் ஆதிவாசி குடும்பத்தை மீட்ட வனத்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

நமக்காக பல துன்பங்களையும் பேச்சுகளையும் தாங்கி குடும்பங்களை விட்டு காவல் காக்கும் காவல் துறைக்கு ,விடுமுறை இல்லாமல் சரியான உணவு உறைவிடம் இல்லாமல் 24 நேரம் நமக்காக உழைக்கிற முக்கியமான துறை காவல் துறை.

வயநாடு நிலச்சரிவில் அட்டமாலா வனப்பகுதியில் சிக்கித்தவித்த பழங்குடியின குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 6 பேரை 8 மணி நேரம் போராடி மீட்ட கேரள வனத்துறை அதிகாரிகள்

அஹலியா பாராமெடிக்கல் சயின்சஸ் பள்ளி வயநாட்டில் தாய் தந்தைகளை இறந்த குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு நல்ல படிப்பையும் இருப்பிடத்தையும் கொடுப்போம் என கேரளாவில் உள்ள துபாயை சேர்ந்த அகல்யா குழுமம் கூறியுள்ளது.

வயநாடு நிலச்சரிவு, பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 வீடுகள் கட்ட 1000 ஏக்கர் தந்த வள்ளல்!கடந்த ஆண்டு, கேரளாவில் நாய்கள் வெட்டப்பட்டன, இன்று அதே நாய்கள் அவர்களை காப்பாற்றுகின்றன.

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ALL KERALA CATERERS ASSOCIATION கேரள சமையற் கலைஞர்களின் கூட்டமைப்பினர் சொந்த செலவில் உணவு வழங்கி வருகின்றனர்.

மேப்பாடி முகாமில் தங்க 'வைக்கப்பட்டுள்ள 600 பேருக்கு 3 வேளையும் இலவசமாக உணவுகளை தயார் செய்து கொடுத்து பசியாற்றி வருகின்றனர்.

வயநாடு சோகத்தில் 40 அடி ஆழத்தில் புதையுண்டவர்களைக் கண்டுபிடிக்க உதவிய  நாய்கள் மாயா, மர்பி மற்றும் மேகி ஆகியோருக்கு மாபெரும் வணக்கம்.

நாய்கள் உயிர்களைக் காப்பாற்றியது.மாயா மற்றும் மர்பி ஆகியவை 40 அடி ஆழம் வரை படுத்திருக்கும் மனித உடல்களின் வாசனையைத் துல்லியமாகக் கண்டறிவதில் வல்லுனர்கள்  .மறுபுறம்  இடி பாடுகளில் சிக்கி உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் .வயநாடு நிலச்சரிவு, கேரள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கிய தமிழக செஸ் வீரர் குகேஷ்.

இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக தான் சம்பாதித்த பணத்தில் 10 லட்சம் வழங்கிய குகேஷ் அவர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுகள்.கேரளாவைச் சேர்ந்த இந்த ஜவுளி உரிமையாளர், வயநாடு நிலச்சரிவில் உயிர் பிழைத்தவர்களுக்கு தனது கடையில் இருந்த அனைத்து புதிய சரக்குகளையும் வழங்கினார்.நிதி சேகரிக்க வந்தவர்களிடம் எதை வேண்டுமானாலும் பேக் செய்து எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார். அதையெல்லாம் மீண்டும் சம்பாதிக்க முடியும், ஆனால் பிரிந்த ஆன்மாவை மீண்டும் கொண்டு வர முடியாது என்றும் அவர் கூறினார்.

அட்வென்சர் சுற்றுலா என்ற பெயரில், இயற்கை பேரிடர் ஏற்படும் இடங்களில் சிக்கி தவிக்கும் சுற்றுலா பயணிகளின் நிலை கவலைக்கிடமாகியுள்ள நிலையில், வயநாட்டில் சசகல வசதிகளும் அதிகம். அதிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எக்கச்சக்கமான ரிசார்ட்டுகளை பார்க்க முடியும்.இதற்காகவே, ஆண்டுதோறும் இப்பகுதிகளில் புதிய கட்டிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி கேட்டு விண்ணப்பங்களும் குவிந்த வண்ணம் இருந்துள்ளன.

மலைகளுக்கு நடுவில் மவுன்டைன் வியூவுடன் கூடிய ரிசார்ட்டுகள், நீச்சல் குளங்களுடன் கூடிய ரிசார்ட்டுகள், கிளாஸ் ரிசார்ட்டுகள் என பல ரிசார்ட்டுக  சாகசத்தை விரும்பும் இளசுகளுக்காக, ஸ்கை டைவிங்க், ஸ்கை சைக்கிளிங், ஜிப் லைன், அந்தரத்தில் கண்ணாடி மீது நடப்பது, போன்றவையும் இங்கு படு ஃபேமஸ். இவற்றையெல்லாம் மக்களுக்கு பரிட்சையப்படுத்த, சமூக வலைத்தள பிரபலங்களும் ப்ரமோஷன் செய்வது உண்டு.சுற்றுலா செல்ல எது உகந்த காலம் என எதையும் கவனிக்காமல், மழைக்காலங்களில் ஏற்படும் விபத்துகள் குறித்து ஏதும் சிந்திக்காமல் சுற்றுலா செல்கின்றனர். இதில் பலர், பெற்றோரிடம் கூட தகவல் கொடுக்காமல், அட்வென்சர் பயணங்களுக்கு புறப்பட்டு விடுகின்றனர். அப்படி தான், தற்போதைய பேரிடரிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சிக்கியுள்ளனர்.

 அவர்களை ராணுவத்தினர், சகதிகளுக்கு இடையில் கயிறுகளை பயன்படுத்தி பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தனர். மீட்கப்பட்டவர்கள் விவரங்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதே நிலை தான் வயநாடு அடுத்த முண்டகை, மேப்பாடி பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ரிசார்ட்டுகளிலும். இந்நிலையில் வயநாட்டில் கடந்த ஒரு வாரமாக செய்யும் வகையில் பருவகாலங்களை கருத்தில் கொண்டு பயணத்தை திட்டமிட வேண்டும் என்பது பாடமாக மாறியுள்ளது.ஓவர் டூரிசம் தான் வயநாட்டின் தற்போதைய நிலைக்கு காரணம் .வயநாட்டில், சடலங்களை தேடும் போது 4 லட்சம் ரூபாய் மீட்பு. பாறை இடுக்கில், கவரில் சுற்றப் பட்டிருந்த பணம், போலீசாரிடம் ஒப்படைப்பு.

எவ்வளவு கஷ்டப்பட்டு எந்த ஒரு நல்ல காரியத்துக்காக சேர்த்து வைத்த பணமோ, மீட்பு பணியாளர்கள் அதை  உரியோர்கள்  ஒப்படைக்க போலீஸில் கொடுத்தனர் இந்த மனசு தான் கடவுள். இந்தியாவை உலுக்கிய  வயநாடு நிலச்சரிவினால் மனிதம் பிறந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News