மாங்காய் மிளகாய் சட்னி
தேவையான பொருட்கள்:
மாங்காய் - 1 (நடுத்தர அளவு), தக்காளி - 3, பச்சை மிளகாய் - 3, வெங்காயம் (நறுக்கியது) - 1 (நடுத்தர அளவு),
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு, மஞ்சள் தூள் - 1/2 மேசைக்கரண்டி, மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி,
உப்பு - 1/2 மேசைக்கரண்டி, எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
செய்முறை
முதலில் மாங்காயையும் தக்காளியையும் பாதியாக நறுக்கி வச்சுக்கோங்க
ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து அதை சூடாக விடுங்கள்,
அதில் எண்ணெய் ஊற்றி மாங்காய், தக்காளியையும்,பச்சை மிளகாவையும் போட்டு நல்லா வதக்கவும்.
நல்லா எண்ணெய்யில் முன்னும் பின்னும் வேகும் வரை வதக்கிகோங்க.
பொன்னிறமாக மாறியதும் அதை ஒரு தட்டில் எடுத்து சூடு ஆற விடுங்கள்.
சூடு ஆறியதும் மாங்காவின் தோலை ஈஸியாக நீக்கிவிடலாம்.
ஒரு மிக்ஸி ஜாரில் நாம் வதக்கிய மாங்காய் தக்காளி பச்சை மிளகாயை சேர்த்துகோங்க.
அது கூடவே நறுக்கியா வெங்காயம், ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி, உப்பு சேத்து நல்லா அரச்சுகோங்க.
தேவைப்பட்டா தண்ணீ சேர்த்து கொஞ்சம் கொர கொறப்ப அரச்சு எடுத்துக்கோங்க.
சூப்பரான "சுவையான மாங்காய் மிளகாய் சட்னி ரெடி" .
இந்த மாங்கா சட்னி, வழக்கமான சட்னிகளுக்கு ஒரு இனிமையான மாற்றாக இருக்கும்.
இந்த சட்னி, காரமும் புளிப்பும் கலந்த ஒரு தனிச்சுவை கொண்டது. வீட்டில் எளிதாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய இந்த மாங்கா சட்னி, அதில் உள்ள புளிப்பு சுவை, வயிற்றை கலக்காமல், வாந்தி போன்ற உணர்வுகளை குறைக்க உதவுகிறது.
இப்போது பருவத்தில் கிடைக்கும் மாங்காய்களை பயன்படுத்தி இந்த சட்னியை வீட்டிலேயே செய்து பாருங்கள். சாதம், நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் இது ஒரு அட்டகாசமான சுவை அனுபவமாக மாறும்.
0
Leave a Reply