மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும் பிறப்பு முதல் 18 வயது மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு மருத்துவச்சான்றுடன் கூடிய அடையாள அட்டை பெறுவதற்கான மருத்துவ முகாம்
விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும் பிறப்பு முதல் 18 வயது மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு ஒன்றிய அளவில் மருத்துவ முகாம் காலை 10.00 மணி முதல் மாலை 1.00 மணி வரை நடைபெற உள்ளது.இம்முகாமில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு மருத்துவச்சான்றுடன் அடையாள அட்டை வழங்குதல் பணி மேற்கொள்ள உள்ளது. மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறுவதற்கு ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்-4 உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் மருத்துவ முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.மேலும் விவரம் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தொலைபேசி எண்:04562-252068 எண்னை தொடர்பு கொள்ளலாம்.
அதன்படி, திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில்; 08.11.2024 அன்று திருவில்லிபுத்தூர் ஆர்.சி.மேல்நிலைப்பள்ளியிலும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில், 15.11.2024 அன்று மகாராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் 22.11.2024 அன்று எம்.ரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 29.11.2024 அன்று அருப்புக்கோட்டை சி.எஸ்.ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்,இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 06.12.2024 அன்று இராஜபாளையம் எஸ்.எஸ்.அரசு மேல்நிலைப்பள்ளியிலும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், 10.12.2024 அன்று சாத்தூர் எட்வர்ட் நடுநிலைப்பள்ளியிலும்,விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில், 11.12.2024 அன்று விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 12.12.2024 அன்று வெம்பக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 17.12.2024 அன்று நரிக்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும்,
காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 19.12.2024 அன்று கல்குறிச்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில், 20.12.2024 அன்று சிவகாசி நகராட்சி எ.வி.டி உயர்நிலைப்பள்ளியிலும், பிறப்பு முதல் 18 வயது மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு ஒன்றிய அளவில் நடைபெற உள்ள மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply