கரியமிலவாயுவை வெளியிடாமல் சிமென்ட் தயாரிக்கும் முறை
புவி வெப்பம் அதிகரிப்ப தால் பல்வேறு பிரச்னைகள் வருகின்றன. எனவே, புவி வெப்பமயமாதலைத் தடுத்து நிறுத்த வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமை புவி வெப்பத்தை அதிகரிப்பதில் கரியமிலவாயு முக்கிய பங்கு வகிக்கிறது. கட்டடங்களைக் கட்டுவதற்கு கான்கிரீட் அவசி யம். அந்த கான்கிரீட் தயாரிப் பில் சிமென்ட் முக்கிய பங்கு வகிக்கிறது. சிமென்ட் உற்பத்தியின் போது பல்லாயிரக் கணக்கான டன் கரியமில வாயு வெளியேற்றப்படுகிறது. அமெரிக் காவின் கலிபோர்னியா பல் கலை, கரியமிலவாயுவை வெளியிடாமல் சிமென்ட் தயாரிக்கும் முறையை உருவாக்கியுள்ளது.
சிமென்ட் தயாரிப்பதற்கு முக்கிய தேவை கால்சியம் ஆக்சைடு எனப்படும் லைம். லைம் ஸ்டோன் எனப்படும் சுண்ணாம்புக் கற்களிலிருந்து இதைப் பிரித்து எடுப்பர். இவ்வாறு பிரித்து எடுப்பதற்குச் சுண்ணாம்புக் கற்களை மிக அதிகமான வெப்பத்திற்குச் சூடாக்க வேண்டும். இவ்வாறு சூடாக்குவதற்கு அதிக எரிபொருள் தேவைப்படுகிறது. இந்த எரிபொருள் அதிக அளவில் கரியமில வாயுவை வெளியிடுகிறது. எனவே, எரிபொருளைப் பயன்படுத்தாமல் சூடு படுத்தாமலேயே கால்சியம் ஆக்சைட்டை உருவாக்கும் எளிய முறையை, இந்தப் பல்கலையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கி இருக்கின்றனர். இந்த முறையில் சுண்ணாம்புக் கற்களைச் சாதாரணமாகத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் அமிலம் கலந்த நீரில் முதலில் கரைக்கின்றனர்.
இது கரைந்த பின்பு இதிலிருந்து சுண்ணாம்பை மட்டும் நானோ வடிகட்டுதல் முறையில் பிரித் தெடுக்கின்றனர். இறுதியில் மின் வேதிமுறையில் கால்சியம் ஹைட்ராக்சைடு உருவாக்கப்படுகிறது. இந்த முறையில் வெப்பத்திற்கு வேலை இல்லை என்பதால் எரிபொருளுக்கும் அவசியமில்லை. எனவே, கரியமிலவாயு உற்பத்தியாவதில்லை.இதில் அதிக அளவில் தண்ணீர் தேவைப்படுகிறது என்பது மட்டும்தான் ஒரே பிரச்னை. இதற்குச் சரியான தீர்வை உருவாக்க விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதில் வெற்றி கிடைத்தால் கரியமில வாயுவே வெளியிடப்படாத சிமென்டை உற்பத்தி செய்ய முடியும்.
0
Leave a Reply