மாடித்தோட்டம் விதை விதைக்கும் முறை:
மாடித்தோட்டம் அமைக்கும் முறைகள் :- ஒவ்வொரு விதையும் விதைப்பதற்கு முன்பு சில வழிமுறைகளை பயன்படுத்தவேண்டும்.வெண்டை விதையை வெள்ளை துணியில் கட்டி அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து எடுத்து அப்படியே மூன்று நாட்கள் வைத்துவிட்டால் முளை வந்துவிடும். அதைத்தான் தொட்டியில் நட வேண்டும். காலை நேரத்தில் விதைப்பது நல்லது.
உரமிடுதல்- மாடித்தோட்டத்தில் தாவரங்களை வளர்ப்பதற்கு தேவையான அளவு தொழுஉரமும், மண்புழு உரமும் போன்றவற்றை கட்டாயம் இடவேண்டும். மண்புழு உரம் தயாரிப்பு முறை: - மண்புழு உரம் தயாரிக்க முதலில் தோட்டக் கழிவுகள், சமையலறைக் கழிவுகள், வீட்டில் உள்ள மற்ற மக்கக்கூடிய கழிவை மக்குவதற்கு விடவும்.இவை நன்றாக மக்குவதற்கு 45, 60 நாட்கள் ஆகும். அதுவரை ஒரு கலனில் தொட்டியில் குழியில் போட்டு வைக்கவும்.கழிவு நன்றாக மக்கிய பிறகு, அதாவது 45-60 நாட்களுக்குப் பிறகு அவற்றில் மண்புழுக்களை விடவும்.அதிலிருந்து 60 நாட்களில் கறுப்பு நிறம் கொண்ட மண்வாசனை நிறைந்த மண்புழு எரு தயாராகி விடும். உரம் தயாராகிவிட்டது என்பதற்கு அதன் வாசனை மாற்றம் முக்கியமானது.
0
Leave a Reply