25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


காது கேளாதவருக்கு உதவும் கண்ணாடி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

காது கேளாதவருக்கு உதவும் கண்ணாடி

பிறவியிலேயே காது கேட்காதவர்களுக்கும், வயதாவது அல் லது பிற காரணங்களால் காது மந்தம் அடைந்த வர்களுக்கும், உதவும் வகையிலான ஒரு புது கண்ணாடியை நியூயார்க் கைச் சேர்ந்த கோர்னெல் பல்கலையில் படிக்கின்ற 25 வயது மாணவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

காது கேட்பதில் குறைபாடு உடையவர்களா ல் எதிரே பேசுபவருடைய வாய் அசைவை வைத்துத் தான் என்ன பேசுகிறார்கள் என்பதை அறிந்து  கொள்ள முடியும்.இவ்வாறு அறிந்து கொள்வதற்குப் பேசுபவரை மிகவும் கூர்மை யாகக் கவனிக்க வேண்டு ம். இந்தச் சிரமத்தைத் தவிர்ப்பதற்காக நிர்பாய்நரங்  (Nirbhay Narang) எனும் மாணவர் ஒரு கண்ணாடியை வடிவமைத்துள்ளார்.

இதைச் சாதாரண மூக் குக் கண்ணாடி போலக் கண்கள் மீது அணிந்து கொள்ளலாம். இது ஐபோன் உடன் ப்ளூடூத் மூலம் இணைக்கப் பட்டிருக்கும்.எதிரே ஒருவர் பேசும் போது அவருடைய குரல் போனில் பதிவாகி அது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூல மாக எழுத்தாக, மாற்றப் படும்.இந்த எழுத்து அணிந்திருப்பவருடைய கண்ணாடியில் தெரியும்.இதனால் தன்னிடம் பேசுபவர் என்ன பேசுகிறார் என்பதைக் கண்ணாடியில் வாசித்து அறிந்துகொள்ள முடியும். அமெரிக்காவில் மட்டும் விற்கப்படுகின்ற இந்தக் கண்ணாடி விரைவில் உலகம் முழுதும் பிரபலமாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News