விருதுநகரில் நடமாடும் வாக்காளர் சேவை மையம்
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில்(14.04.2024) 100 சதவீதம் வாக்குபதிவை வலியுறுத்தி, மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நடமாடும் மாதிரி வாக்குபதிவு மையத்தை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் மூலம் 18 வயது நிரம்பிய முதல் மற்றும் இளம் தலைமுறை, மாற்றுத்திறனளிகள், முதியோர்கள் என அனைத்து தரப்பினரிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை எய்திடும் வகையிலும், என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதை வலியுறுத்தியும் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் வாக்குப் பதிவு சேவைப் பணிகளை மேற்கொள்ள நடமாடும் (பேருந்து) மாதிரி வாக்கு பதிவு மையம் தொடங்கி வைக்கப்பட்டள்ளது.இந்த நடமாடும் பேருந்தில், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், என் வாக்கு விற்பனைக்கு அல்ல, வாக்களிப்புக்கு பணம் பெறக் கூடாது போன்ற விழிப்புணர்வு விளம்பரங்களும், இலவச வாக்காளர் உதவி எண்கள், தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க தொடர்பு எண்கள், வாக்களராக பதிவு செய்து கொள்ளும் வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.மேலும் மாதிரி வாக்குப் பதிவு மின்னணு இயந்திரமும் அமைக்கப்பட்டு, வாக்களிப்பு பயிற்சியும் வழங்கப்படும் விதத்தில் ஏற்பாடுகள் இந்த பேருந்தில் செய்யப்பட்டுள்ளன.இந்த பேருந்து மாவட்டத்தில் கடந்த தேர்தலில் குறைந்தளவு வாக்குபதிவு நடைபெற்ற பகுதிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், இளம் வாக்காளர்கள் உள்ள கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
எனவே 18 வயது பூர்;த்தி அடைந்த அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும், சாதி, மதம், பரிசுப்பொருட்கள், பணத்துக்கு ஆட்படாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும என்றும், இந்த நடமாடும் மாதிரி வாக்குபதிவு பேருந்தினை வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply