எம்.எஸ். சுப்புலட்சுமியாக ராஷ்மிகா?
இந்தியாவின் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி மற்றும் பாரத ரத்னா விருது பெற்ற எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை திரைப்படமாக உருவாக உள்ளது.
இப்படத்தை இயக்குநர் கவுதம் தின்னனூரி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
முதலில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவி மற்றும் ருக்மணி வசந்த் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், சில காரணங்களால் அந்த வாய்ப்பு அவர்களுக்கு அமையவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இந்த முக்கிய கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.
எம்.எஸ். சுப்புலட்சுமியின் பிறந்தநாள் செப்டம்பர் 16 என்பதால், அதே நாளில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
0
Leave a Reply