முகேஷ் அம்பானி, நீதா அம்பானியின் இளைய வாரிசான ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் இந்த ஆண்டு ஜூலையில் லண்டனில் உள்ள ஸ்டோக் பார்க் எஸ்டேட்டில் நடைபெறும் என்று கூறப்படுகிறது
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஆனந்த் அம்பானியின் திருமண முன் வைபோக நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் மூன்று நாட்களுக்கு மிகப் பிரமாண்டமான முறையில் நடந்தேறியது.இந்த நிகழ்ச்சியில் உலகின் மிகப் பெரிய தொழிலதிபர்கள், பாலிவுட் பிரபலங்கள், அரசியல்வாதிகள் பங்கேற்று சிறப்பித்தனர். பிரபல பாப் இசை பாடகி ரிஹானா 6 மில்லியன் டாலர் கட்டணம் பெற்று இரண்டு மணிநேர நிகழ்ச்சியை நடத்தினார். திருமணத்திற்கு முந்தைய களியாட்டங்களுக்கு, மொத்தமாக ரூ. 1260 கோடி செலவானது,. திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகளின் ஆடம்பரம் விண்ணை முட்டிய நிலையில், திருமணத்துக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ரூ 1200-1500 கோடி இடையே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண விழாக்கள் லண்டனில் முக்கிய விழாவாகவும், அபுதாபியில் ஒரு இசை/காக்டெய்ல் நிகழ்ச்சிகளாகவும் அமைக்கப்பட்டுள்ளன.
புகழ்பெற்ற மலர் கலைஞரான ஜெஃப் லீதம், கர்தாஷியன் குடும்பத்துடன் இணைந்து அலங்கரித்தார். திருமணத்துக்கு முந்தைய அலங்காரத்துக்கு தனது நிபுணத்துவத்தை சிறப்பாகக் காட்டினார். வரவிருக்கும் திருமணத்துக்கும் இதேபோன்ற ஆடம்பரமான அலங்காரத்தை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.. இது இந்த ஆண்டின் மிகவும் ஆடம்பரமான திருமணங்களில் ஒன்றாகக் குறிக்கப்படுகிறது. ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்டின் திருமணம் இந்த ஆண்டு ஜூலையில் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. திருமணம் லண்டனில் உள்ள ஸ்டோக் பார்க் எஸ்டேட்டில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. இருந்தாலும் பாலிவுட்டை சேர்ந்த பிரபலங்களுக்கு தேதி சொல்லப்பட்டு லண்டன் செல்வதற்கான விமான டிக்கெட்கள் எடுக்கப்பட்டுள்ளன.
0
Leave a Reply