25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


நாஷா முக்த் பாரத், குஷால் பாரத் திட்டத்தின் கீழ் நாஷா முக்த் பாரத் அபியானின் 5 ஆண்டு கொண்டாட்டம் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான உறுதிமொழி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நாஷா முக்த் பாரத், குஷால் பாரத் திட்டத்தின் கீழ் நாஷா முக்த் பாரத் அபியானின் 5 ஆண்டு கொண்டாட்டம் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான உறுதிமொழி.

 பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில், நாஷா முக்த் பாரத், குஷால் பாரத் திட்டத்தின் கீழ் நாஷா முக்த் பாரத் அபியானின் 5 ஆண்டு கொண்டாட்டம் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான உறுதிமொழி நிகழ்வு நடைபெற்றது.இந்த நிகழ்வில் விருதுநகர் மாவட்டம், சூலக்கரை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் “நஷா முக்த் பாரத் அபியான்“(NMBA) திட்டத்தின் 5வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் தேசிய நிகழ்வாக “போதைப்பொருள் இல்லாத இந்தியாவிற்கான பிரச்சாரம்” என்ற தலைப்பில் அக்டோபர் 2025-ம் மாதத்தில் நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.குறைந்தபட்சம் ஒரு கோடி மக்கள் போதைப்பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராக உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 10% பேர் இப்பொருள் குறித்து உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டத்தில் என்.எம்.பி.ஏ. திட்டத்தினை சிறப்பாக கொண்டாடும் வகையில் 27.10.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதைப்பொருள் பயன்பாடுகளினால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு பேரணியும், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, 18.11.2025 இன்று விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் “போதைப்பொருள் இல்லாத இந்தியாவிற்கான பிரச்சாரம்” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இளைஞர்கள் தேசத்தின் சக்தியாகவும், சமூகம் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பு முக்கியம் என்பதால் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்கவேண்டும். மாணவர்களாகிய நீங்கள் உங்களின் எதிர்கால நலனை கருத்தில்கொண்டு போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் கல்வியில் கவனம் செலுத்தி உங்களுக்கும், உங்களின் பெற்றோர், சமூகம் மற்றும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கவேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில் போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை முழுமையாக அறிந்து போதைப் பழக்கத்திற்கு ஆளாக்கூடாது. குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்க வேண்டும். போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த நமது பங்களிப்பை முழுமையாக அளிக்கவேண்டும். போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை வேரறுக்க அரசுக்கு துணை நிற்கவேண்டும். நமது மாவட்டத்தை போதைப்பொருட்கள் இல்லாத ஒரு பாதுகாப்பான மாவட்டமாக மாற்ற நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி மீனாட்சி, மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News