தமிழ்த்துறை சார்பாக "நாட்டார் வழக்காற்றியல்"என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கம்
இராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி கலையரங்கத்தில் வைத்துத் தமிழ்த்துறை சார்பாக "நாட்டார் வழக்காற்றியல்"என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு வந்த அனைவரும் வரவேற்றுத் தமிழ்த்துறைத் தலைவர் திரு.ச.மைதிலிராஜ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி ஆட்சி மன்றக் குழுச் செயலாளர் முனைவர் எஸ்.சிங்கராஜ் அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றுத் தலைமையுரை ஆற்றினார்.நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் த.வெங்கடேஸ்வரன் மற்றும் சுயநிதிப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர் பெ.சூரியகலா ஆகியோர் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்று வாழ்த்துரை வழங்கினார்கள்.
கருத்தரங்கத்திற்குச் சிறப்பு விருந்தினர்களாக முனைவர் டி.தருமராஜ் முனைவர் பா.ச.அரிபாபு மற்றும் முனைவர் கு.சக்திலீலா ஆகியோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.நிகழ்ச்சியில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தேர்வாணையத்தின் தலைவரும், நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறைத் தலைவருமான முனைவர் டி.தருமராஜ் அவர்கள் "படிக்காதவர் படித்த புத்தகங்கள்" என்ற தலைப்பில் நாட்டார் வழக்காற்றியலில் உள்ள மக்களின் இன்றைய பழக்க வழக்கங்கள் மற்றும் நாட்டுப்புறவியல் சார்ந்த மக்களின் நம்பிக்கை குறித்துச் சிறப்புரையாற்றினார். அமெரிக்கன் கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் பா.ச.அரிபாபு அவர்கள் "இராமாயணநாடகம் -சடங்கே நாடகமாதல்" என்ற தலைப்பில் தமிழகத்தில் இன்றைய காலகட்டத்தில் நாட்டார் வழக்காற்றியலில் இராமாயணம், மகாபாரதப் புராணங்கள் எவ்வாறு அரங்கேற்றப்படுகிறது மட்டுமல்லாமல் அக்கருத்துகள் நாட்டார் வழக்காற்றியலோடு எவ்வாறு தொடர்பு படுத்தப்படுகிறது என்பன பற்றி மிகச் சிறப்பாக உரையாற்றினார்
.காளீஸ்வரி உதவிப் பேராசிரியர் முனைவர் கு.சக்திலீலா அவர்கள் "பெருந்திரள் வழிபாட்டின் நீட்சி" என்ற தலைப்பில் நாட்டார் வழக்காற்றியலில் உள்ள பெருந்தெய்வ மற்றும் சிறு தெய்வ வழிபாடு குறித்துப் பல அரிய கருத்துக்களைப் பல்வேறுநூல்களில்இருந்துமாணவமாணவியர்களுக்குஎடுத்துரைத்தார்.கருத்தரங்கத்திற்குநாட்டார்வழக்காற்றியலில் பயன்படுத்தப்பட்ட பழம்பெரும் பொருட்கள் காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டன.கருத்தரங்கத்திற்குப் பிற கல்லூரிமாணவமாணவிகள்பேராசிரியர்கள்மற்றும்ஆய்வாளர்கள்ஏராளமானோர்கலந்துகொண்டனர்.இந்நிகழ்ச்சியில் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள்.( சுயநிதிப் பிரிவு ) நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்து விழாவைச் சிறப்பித்தனர்.
0
Leave a Reply