நவராத்திரி வழிபாடு
நாம் எல்லோரும் ஒன்றே, அனைத்தும் இறைசக்தியின் வடிவமே என்று உணர்த்துவதுதான்நவராத்திரி பண்டிகை.. துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று இறைசக்திகளும் ஒன்று சேர்ந்து மகிஷாசுர மர்த்தினியாக அவதாரம் எடுத்து, மகிஷன் எனும் அரக்கனை அழிப்பதையே நவராத்திரி வரலாறு என்கிறார்கள்.துர்க்கையான பார்வதியை முதல்3 நாட்களும், அடுத்து லட்சுமியை3 நாட்களும், இறுதி3 நாட்கள் சரஸ்வதியையும்10வது நாள் விஜய சாமுண்டீஸ்வரியாக வணங்க வேண்டும்.துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து மன உறுதி கிடைக்கும். லட்சுமியை வணங்கினால் பொன், பொருள், நல்ல ஒழுக்கம், உயர்ந்த பண்பாடுகள், கருணை, மனிதநேயம், நல்ல சிந்தனைகள் கிடைக்கும். சரஸ்வதியை வழிபட்டால் ஞானம், உயர்ந்த கல்வி, கலைகளில் தேர்ச்சி கிடைக்கும்.
.முதல் நாள் :
அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.பூக்கள் : மல்லிகை, சிவப்புநிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நைவேத்தியம் : வெண்பொங்கல், சுண்டல், பழம்,
இரண்டாம் நாள்: : முல்லை, துளசி, மஞ்சள்நிற கொன்றை, சாமந்தி, நீல சம்பங்கி பூக்களால் பூஜிக்க வேண்டும்.புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம்.கோதுமை மாவினால் கோலம் போட வேண்டும்.
மூன்றாம் நாள்-
மலர் கோலம் போட வேண்டும்.செண்பக மொட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
கோதுமை சர்க்கரைப் பொங்கல், காராமணி சுண்டல்
.நான்காம் நாள்-அட்சதை கொண்டு படிக்கட்டு போல கோலமிட வேண்டும்.செந்தாமரை, ரோஜா மற்றும் ஜாதி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்.: தயிர் சாதம், அவல் கேசரி, , பட்டாணி சுண்டல்..
ஐந்தாம் நாள் -கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும். கதம்பம், மனோரஞ்சிதம் பூக்களால் பூஜிக்க வேண்டும்.சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பூம்பருப்பு சுண்டல்.
ஆறாம் நாள் :-: கடலை மாவினால் தேவி நாமத்தை கோலமிட வேண்டும்.பாரிஜாதம், விபூதிப் பச்சை, செம்பருத்தி, சம்பங்கி, கொங்கம்.தேங்காய் சாதம், தேங்காய் பால்பாயாசம், ஆரஞ்சு பழம், மாதூளை, பச்சைப்பயறு சுண்டல்
ஏழாம் நாள் :
நறுமண மலர்களால் கோலமிட வேண்டும். பூக்கள் : தாழம்பு, தும்பை, மல்லிகை, முல்லை.எலுமிச்சம் பழசாதம், பழ வகைகள், ,கொண்டக்கடலை சுண்டல்
எட்டாவது நாள் :
பத்ம கோலம் மருதோன்றி, சம்பங்கி பூக்கள், வெண்தாமரை, குருவாட்சி.: பால்சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல்.
ஒன்பதாம் நாள் :வாசனைப் பொடிகளால் ஆயுதம் போன்ற கோலம் போட வேண்டும்.தாமரை, மருக்கொழுந்து, துளசி, வெள்ளை மலர்கள்., உளுந்து வடை, வேர்க்கடலை, சுண்டல், கடலை, எள் பாயாசம், , எள் உருண்டை..
பத்தாவது நாள் :
பால் பாயாசம், காராமணி சுண்டல், இனிப்பு வகைகள். நறுமண மலர்களால் கோலமிட வேண்டும்.
நவராத்திரியில், அம்பாளுக்கு விதவிதமான சுண்டல், பாயாச வகைகள் நிவேதனம் செய்யப்படுகிறது. அறிவியல் ரீதியாகவும் இதற்கு காரணம் உண்டு.. தேவர்களுக்கு சிவன், விஷ்ணு அமிர்தம் தந்து, அவர்களை காத்தது போல, பூமி உயிர்வாழ “மழை என்னும் அமிர்தத்தைத் தருகிறார்கள்.இதனால் பூமி “சக்தி பெறுகிறது. அந்த சக்தி எனும் பெண்ணுக்கு, பூமியில் விளைந்த விதவிதமான தானியங்கள் பக்குவப்படுத்தப்பட்டு நிவேதனம் செய்யப்பட்டது. அதில் சுண்டல் பிரதான இடம் பெற்றது. நவராத்திரி காலமான புரட்டாசி, ஐப்பசியில் அடைமழை ஏற்படும். இதனால் தோல்நோய் போன்றவை அதிகமாகும். இதைப் போக்கும் சக்தி சுண்டலுக்கு உண்டு.
0
Leave a Reply