25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


இயற்கையான ரத்தசுத்திகரிப்புமருந்து வேப்பம்பழம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இயற்கையான ரத்தசுத்திகரிப்புமருந்து வேப்பம்பழம்.

தமிழகத்தின் முக்கிய மரங்களில் வேம்புவும் ஒன்று. இதன் இலை முதல் பட்டை வரை கசப்புத்தன்மை கொண்டவை என்றாலும், வேப்பம் பழங்கள் சற்று இனிப்பு தன்மை உடையவை. மருத்துவ குணங்களையும் கொண்டவை. ஜூன் முதல் ஆகஸ்டு வரையிலான மாதங்களில் பழுத்து உதிரும். இவை, இயற்கையான ரத்தசுத்திகரிப்புமருந்தாகும். தோல் புண்கள் மற்றும் பருக்களை குணப்படுத்துகிறது. உடலில் பல நோய்களை இயற்கையாகவும் வேகமாகவும் குணப்படுத்துகிறது. வேப்பம் பழ விதைகளில் இருந்து எண்ணெய் பெறப்படுகிறது. வேப்ப எண்ணெயில் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. குறிப்பாக, முடிகளில் வறட்சியை நீக்கி, சருமம், முகத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். வேப்பம் பழங்கள் வலுவான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால், உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. குறிப்பாக, 'பிளாவனாய்டுகள்' என்ற பொருள் நிறைந்து இருப்பதால், உடலில் புற்றுநோய் உருவாகும் அபாயத்தையும் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த பழங்களை கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டும் என்று சித்த மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News