காமன்வெல்த் 2026-க்கு புதிய '3V' லோகோ அறிமுகம்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக ஒவ்வொரு முறையும் போட்டியை நடத்தும் நாடு தனித்துவமான லோகோவை அறிமுகப்படுத்துவது வழக்கம். ஆனால், கிளாஸ்கோ 2026 தொடங்கி அனைத்து காமன்வெல்த் போட்டிகளுக்கும் பயன்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த புதிய '3V' லோகோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்த லோகோவில் ஆங்கில எழுத்தான 'V' மூன்று முறை இணைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வெற்றி (Victory), சமத்துவம் (Equality), மனிதநேயம் (Humanity), ஆற்றல் (Energy) ஆகிய மதிப்புகளை பிரதிபலிக்கிறது.
லோகோவின் மேற்பகுதியில் உள்ள ஆறு பிரிவுகள், ஆப்ரிக்கா, ஆசியா, அமெரிக்கா, கரீபியன், ஐரோப்பா மற்றும் ஓசியானியா ஆகிய காமன்வெல்த் நாடுகள் அமைந்துள்ள கண்டங்களை குறிக்கின்றன. இனி நடைபெறும் அனைத்து காமன்வெல்த் போட்டிகளிலும் இந்த லோகோ பொதுவான அடையாளமாக பயன்படுத்தப்படும்.
0
Leave a Reply