கிரிக்கெட் பைனலில் 25 ஆண்டுக்கு பின் மோதல் நியூசிலாந்து, இந்தியா
துபாயில் வரும் மார்ச் 9 நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி பைனலில் ரோகித் சர்மா தலைமை யிலான இந்திய அணி, சான்டனர் வழிநடத்தும் நியூசிலாந்தை எதிர் கொள்கிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்த இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடுகிறது.
இதுபற்றி நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் கூறுகையில், 'துபாயில் மட்டும் விளையாடுவதால், இங்கு எப்படி செயல்பட வேண்டுமென இந்தியாவுக்கு தெளிவாக தெரியும். தற்போது இந்திய அணி சிறப்பாக விளையாடுகிறது. பைனலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்," என்றார்.
0
Leave a Reply