இனி 7 நாடுகளில் நாம் ( UPI ) யுபிஐ சேவைகளை பயன்படுத்தலாம்
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிமாற்ற புரட்சிக்கு வித்திட்ட ஒரு அமைப்பு தான் யுபிஐ எனப்படும் யுனிஃபைடு பேமெண்ட் இண்டர்ஃபேஸ். சிறு வியாபாரத்தில் தொடங்கி, தனிநபர்களுக்கு இடையிலான பண பரிமாற்றம், பெரிய பெரிய கடைகளில் பொருட்களுக்கு பணம் செலுத்துவது என அனைத்தையும் எளிதாக்கிவிட்டது யுபிஐ.இந்தியாவில் யுபிஐ சேவையானது பீம் செயலி மற்றும் கூகுள் பே, அமேசான் பே, போன் பே, பேடிஎம் ஆகிய செயலிகள் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. இனி இந்த யுபிஐ சேவையை இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பெற முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. உலக நாடுகளுக்கு எல்லாம் முன்னுதாரணமாக இந்தியாவின் யுபிஐ சேவைகள் பார்க்கப்படுகின்றன. அந்த வகையில் யுபிஐ சேவையை உலகமயமாக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளிலும் இந்தியர்கள் எளிமையாக யுபிஐ சேவைகளை பயன்படுத்தி பணப்பரிமாற்றங்களை செய்து கொள்ள பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அண்மையில் இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளின் யுபிஐ சேவை விரிவாக்கம் செய்யப்பட்டது. நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அமைப்பு தான் யுபிஐ சேவைகளை பராமரித்து வருகிறது. இந்த அமைப்பு பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி, அங்கேயும் யுபிஐ சேவைகளை பயன்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
முதன்முறையாக இந்தியாவின் யு பி ஐ சேவைகளை பயன்படுத்த அனுமதித்த நாடு பூடான் ஆகும். கடந்த 2021ஆம் ஆண்டு முதல், பூட்டானில் யுபிஐ சேவை பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது பூடான், சிங்கப்பூர் , நேபாளம், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் ,இலங்கை, மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் எல்லாம் நாம் இந்தியாவில் பயன்படுத்துவதைப் போலவே யுபிஐ சேவைகளை பயன்படுத்தலாம்.
0
Leave a Reply