நார்த்தை இலையில் உள்ள சத்துக்கள்
நார்த்தங்காயைவிட, நார்த்தங்காய் இலைகளில் மிகுந்த சத்துக்கள் உள்ளனஎலுமிச்சை குடும்பத்தை சேர்ந்த நார்த்தங்காய், அதிகளவு மருத்துவ குணங்களை கொண்டது. நார்த்தங்காயை சர்க்கரை நோயாளிகள், இதய நோய் இருப்பவர்கள், ரத்த அழுத்த பிரச்சினைகள் இருப்பவர்கள் கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்..உடல் சூட்டை தணிக்கக்கூடியது நார்த்தங்காய் பழங்கள்.. கர்ப்பிணிகளுக்கு இந்த நார்த்தம் பழச்சாறு மிகவும் நல்லது.. ஹீமோகுளோபின் பிரச்சனை இருப்பவர்கள், நார்த்தம்பழத்தை தினமும் சாப்பிடலாம்.. ஆனால், நார்த்தம்பழத்தை காலையில் சாப்பிட்டு வரவேண்டுமாம். நார்த்தங்காய் பழத்தை ஜூஸ் போல பிழிந்து, அதனை வெந்நீருடன் கலந்து குடித்தால், வயிற்றில் ஏற்படும் வாயு சம்பந்தமான பிரச்சினைகள் நீங்கும்.. இந்த சாறு, இதய நோய், பக்கவாதம் ஆகியவை உருவாகும் அபாயத்தை குறைக்க கூடியது.. நார்த்தங்காயில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் சத்துக்கள் நிறைந்துள்ளதால், புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது. நார்த்தங்காய் தோலை நீக்கி, உள்ளே இருக்கக்கூடிய சுளையை மென்று தின்றால், வாய் துர்நாற்றம் நீங்கும். கர்ப்பிணிகள்: கர்ப்பிணி பெண்கள் தினமும் நார்த்தங்காய் இலையை பொடி செய்து சாப்பிடலாம். கால்சியம், மக்னீசியம், அயோடின், இரும்புச்சத்து, சோடியம், என அத்தனை சத்துக்களும் இந்த நார்த்தை இலையில் உள்ளன.. இந்த இலையில் பொடி செய்து சாப்பிட்டால், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.. வாந்தி உணர்வும் கட்டுப்படும்.
இலைகளில் நார்ச்சத்துகள் அதிகம் என்பதால், ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களுக்கும் பலனுள்ள இலைகளாக அமைகின்றன. குடல் பாதுகாப்பையும் மேம்படுததுகிறது. அஜீரணம்: செரிமான பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த நார்த்தங்காய் இலைகள் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.. அஜீரணக் கோளாறுகளை போக்க வேண்டுமானால், இந்த இலைகளை பொடி செய்து சாப்பிடலாம்.. இதனால், நெஞ்செரிச்சலும் கட்டுப்படும். உடல் சூடு அதிகரித்தாலும், பித்தம் ஏற்பட்டுவிடும்.. வாந்தி எடுப்பது போன்ற உணர்வு அதிகரிக்கும்.. இந்த கோளாறுகளையெல்லாம் நார்த்தங்காய் இலைகள் நீக்கிவிடும்.. இதற்கு இலைகளை துவையல் போல செய்து சாப்பிடலாம்.. அதாவது, நார்த்தங்காய் இலைகளின் நடுவில் இருக்கும் காம்பை நீக்கிவிட்டு, வெறும் இலைகளை பொடி பொடியாக நறுக்கி துவையல் செய்து சாப்பிட்டால், பித்த வாந்தி, வாய் கசப்பு, தலைசுற்றல் போன்றவை நீங்கும்.இதில் சிட்ரிக் அமிலம் அதிகமுள்ளதால், வைட்டமின் C சத்துக்களும் நிறைந்தள்ளது.. இதனால், நோயெதிர்ப்பு சக்தி பெருகுகிறது. அதுபோலவே, இந்த இலைகளும் ரத்த சுத்திகரிப்புக்கு உதவுகிறது. வயிற்றுப்புண்கள், வாய்ப்புண்களை இந்த நார்த்தங்காய் ஆற்றுகிறது..
0
Leave a Reply