ஊட்டச்சத்து உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி
இராஜபாளையம்ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் துளிஅமைப்பின் மூலம் கலசலிங்கம் பல்கலைக்கழகமாணவிகள் நடத்திய ஊட்டச்சத்து உணவு vs செயற்கை சுவை உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளிமாணவர்களுக்குநடத்தப்பட்டது. பள்ளித்தாளாளர் திருமதி ஆனந்தி அவர்கள்நிகழ்ச்சியை தலைமை தாங்கி விருந்தினரை கவுரவும் செய்ய பள்ளி முதல்வர் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி மாணவர்களுக்கு இடையே மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியது. உணவின்முக்கியத்துவம், துரித உணவால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி PPT மூலம் தெளிவாகவிளக்கினார்கள்.Interaction, கேள்வித்தாள் அமர்வின் மூலம் பள்ளி மாணவர்களின் கருத்துக்களை பரிமாற்றம் செய்து கொண்டனர். எதைக்கண்டு நாம் துரித உணவு அல்லதுசெயற்கை உணவு நோக்கி நகர்கிறோம் என்பதை படவிளக்கம் மூலம் அறிவுறுத்தினார்கள். மாணவர்களைஉற்சாகப்படுத்த ,ஓவியப் போட்டியும் நடத்தி, சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கினர். இது பள்ளி மாணவர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. மிகச்சிறந்த முன்னெடுப்பாக நாளைய தலைமுறைக்கு இந்தநிகழ்வு அமைந்தது. பல மாணவர்கள் இனிமேல் Junk Food எடுப்பதில்லை என, உறுதி மொழியும்எடுத்துக்கொண்டது, நிகழ்வின் வெற்றிக்கான அறிவுரையாக அமைந்தது. கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவிகளுக்கு ,எங்கள் நன்றிகளும், வாழ்த்துக்களும். வளர்ந்த மாணவர்கள் ,வளரும் மாணவர்களுக்கு ,இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவது, தன்னையும் ,அடுத்த தலைமுறையையும், சிறந்தபாதையில் கொண்டு செல்லும். ஆசிரியர்பூங்கோதை நன்றி நவில விழாஇனிதே நிறைவு பெற்றது.
0
Leave a Reply