ஓட்ஸ் வெஜ் ஊத்தாப்பம்.
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் 2கப் , ரவை ஒரு கப்,தயிர் ஒரு கப், சோடா உப்பு கால் ஸ்பூன் , உப்பு தேவையான அளவு,
எண்ணெய் தேவையான அளவு
அலங்கரிக்க தேவையானவை – வெங்காயம்,கேரட் ,கறிவேப்பிலை,கொத்தமல்லி
செய்முறை
முதலில் ஒரு வாணலியில் ஓட்ஸை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
பிறகு வறுத்த ஓட்ஸை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
பொடித்த ஓட்ஸ் உடன் ரவை சோடா உப்பு தயிர் தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு மணி நேரம் மூடி போட்டு ஊறவிடவும்.
ஊறிய பிறகு தேவை என்றால் சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
பிறகு தோசைக்கல்லை காயவைத்து மாவை ஊத்தாப்பமாக ஊற்றி அதன்மேல் வெங்காயம் ,கேரட், கறிவேப்பிலை, கொத்தமல்லி ,மிளகுத்தூள், உப்பு ,ஆகியவை கலந்து ஊத்தாப்பத்தின் மேல் பரப்பி விட்டு எண்ணெய் ஊற்றி ,வேகவைத்து எடுத்தால் மிகவும் சுவையான ருசியான ஓட்ஸ் ஊத்தாப்பம் தயார்.
0
Leave a Reply