ஒலிம்பிக் பாட்மின்டன்
ஆண்கள் ஒற்றையர் எல் பிரிவு 2வது போட்டியில், உலகின் நம்பர் 22 இந்தியாவின் லக்சயா சென் , உலகின் நம்பர் 4 இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டி 26 மோதினார். பாராமாக ஆடிய லக்சயா சென் 21-18, 21-12 என வெற்றி பெற்றார். முதல் போட்டியில் பெல்ஜியம் வீரரை வீழ்த்திய லக்சயா சென், எல் பிரிவினல் இருந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நழைந்தார்.
ஒலிம்பிக் பாட்மின்டன் பெண்கள் ஒற்றையர் 'எம்' பிரிவு 2வது போட்டியில் இந்தியாவின் சிந்து, எஸ் தோனியாவின் கிறிஸ்டின் குபா மோதினர். முதல் செட்டை 21-5 எனக் கைப் பற்றிய சிந்து, இரண்டா வது செட்டை 21-10 என வென்றார். 2 புள்ளிகளுடன் எம் பிரிவில் முதலிடம் பிடித்து, ரவுண்டு 16 சுற்றுக்கு முன்னேறினார். இன்று நடக்கும் ரவுண்டு 16 போட்டியில் சிந்து சீனாவின் ஹிபிங்ஜியாவோ மோதுகின்றனர்.
பெண்கள் அணிகளுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் ஆர்டிஎஸ்டிக் ஆல் அரவுண்டு பிரிவு பைனலில் சிமோன் பைல்ஸ், ஜேட் கேரி, ஜோர்டான் சிலிஸ், சுனிசாலி, ஹெஸ்லி ரிவேரா அடங்கிய அமெரிக்க அணி முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றது.
0
Leave a Reply