குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் ”குழந்தைகளுக்கான நடை (Walk for Children)” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (14.11.2024) “நவம்பர்-14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் ”குழந்தைகளுக்கான நடை (Walk for Children)” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.
மாவட்டத்தில் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று 14.11.2024 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ”குழந்தைகளுக்கான நடை (Walk for Children)” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளான குழந்தைத் திருமணம், இளம்வயது கர்ப்பம், பாலியல் வன்முறை, பள்ளி இடைநிற்றல், போதைப்பொருள் பயன்பாடு, குழந்தைத் தொழிலாளர், சமூக ஊடகங்கள் தாக்கம், பாலின வேறுபாடு மற்றும் வேறு எந்தவிதமான குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளை கண்டறிந்தால் உடனடியாக குழந்தைகளை பாதுகாக்கும் செயலில் ஈடுபட வேண்டும். சாதி மன இன வேறுபாடுடின்றி அனைத்து குழந்தைகளையும் சமமாக நடத்த வேண்டும். பாலின தேர்வு நிலையற்ற குழந்தைகளுக்கான பாதுகாப்பு சூழலை அனைத்து நிலையிலும் உறுதிபடுத்த வேண்டும்.
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கும், மனவளர்ச்சி குன்றிய, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கும் அவர்களது அணுகல்களை உறுதி செய்து பாதுகாப்பு மற்றும் பராமரிப்பினை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். குழந்தைகள் தொடர்பாக பிரச்சனைகள் கவனத்திற்கு வரும் பட்சத்தில் உடனடியாக 1098, 181 மற்றும் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும். நம் எதிர்காலத்தில் முதலீடு செய்வது என்பது நம் குழந்தைகளுக்காக முதலீடு செய்வதாகும் என்பதை உணர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசுடன் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். பாதுகாப்பான குழந்தைப்பருவத்திற்காக தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து விதமான குழந்தைநேய செயல்பாடுகளில் அனைவரும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இந்த பேரணியில் அரசு அலுவலர்கள், தன்னார்வு தொண்டு நிறுவனங்கள், பள்ளி மாணவர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு, குழந்தைத் திருமணம், பாலியல் வன்கொடுமை, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழித்தல், கல்வியின் அவசியம் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியபடி, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முன்னதாக, குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஹிமான்சு மங்கள்,I A S., மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி அருள்செல்வி, துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி பவித்ரா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகளின் மாவட்ட திட்ட அலுவலர் திருமதி தனலட்சுமி, குழந்தைகள் நலக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், வேல்டுவிசன் இந்தியா தொண்டு நிறுவன திட்ட அலுவலர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் நேரு யுவகேந்திரா தன்னார்வலர்கள் உள்ளிட்ட சுமார் 250 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply