மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதால், மகாராஷ்டிர வெங்காய உற்பத்தியாளர்கள் விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள்
உள்நாட்டுச் சந்தையில் வெங்காய விலை கடுமையாக உயர்ந்ததால், விலையை கட்டுக்குள் வைக்கவும், போதிய அளவு கையிருப்பை உறுதி செய்யவும் கடந்த டிசம்பர் மாதம் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கு மட்டும், குறிப்பிட்ட அளவில் ஏற்றுமதி செய்ய விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில்,ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை டன் ஒன்றுக்கு550 டாலராக இருக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. எனினும் வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. தடை நீக்கப்பட்டுள்ளதால், மகாராஷ்டிர வெங்காய உற்பத்தியாளர்கள் பெரிதும் பயனடைவார்கள்
என்று மாநிலத்தின் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply