25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆரஞ்சு செம்பருத்தி ஜூஸ்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆரஞ்சு செம்பருத்தி ஜூஸ்.

தேவையான பொருட்கள்-
1 கப் செம்பருத்தி ஜூஸ்,
1 கப் ஆரஞ்சு ஜூஸ்,
1டேபிஸ்பூன் இஞ்சி ஜூஸ்,
தேவைக்கு தேன் அல்லது சர்க்கரை.
செய்முறை -

முதலில் 5-10 செம்பருத்தி பூவை அதோடு காம்பு மற்றும் மகரந்தம் நீக்கி, 1 கப் கொதிக்கிறகண்ணீரில் ஒரு நிமிடம் கொதிக்க விட்டு ஸ்டவ் ஆப் செய்து மூடி, ஆற விட்டு வடி கட்டி எடுத்துவைக்கவும். 

இயற்கையான சிவப்பு கலரில் ஜூஸ் கிடைக்கும்.
அதே போல் 2 ஆரஞ்ச்சை எடுத்து ஜூஸ் பிழிந்து எடுத்துக்கவும், இஞ்சி சாறும் எடுத்து வைக்கவும்.

ஒரு பெரிய பவுலில் ஆரஞ்சு ஜூஸ் + செம்பருத்தி ஜூஸ் + இஞ்சி ஜூஸ் சேர்த்து நன்கு கலக்கவும். இனிப்புக்கு தேவையான தேன் விட்டு நன்கு கலந்துவிடவும்.. 

அருமையான சுவையில் ஆரோக்கியமான செம்பருத்தி, ஆரஞ்சு இஞ்சி தேன் ஜூஸ் தயார்.. 

ஐஸ் க்யூப்ஸ்சேர்த்து ருசித்து பருகவும்..

தேன்க்கு பதில் வெள்ளை சக்கரையும் சேர்த்து செய்யலாம்..
மிக சுவையான, உடல் ஆரோக்கியத்துக்கேற்ற அருமையான ஜூஸ்.. எளிமையாக செய்ய கூடியது..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News