25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >>


பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்திய அணியில் 166 வீரர், வீராங்கனைகள்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்திய அணியில் 166 வீரர், வீராங்கனைகள்!

ஜப்பானின் நகோயா நகரில் நடைபெறவுள்ள 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் 166 வீரர், வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான இந்தப் போட்டி அக்டோபர் 18 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க மொத்தம் 275 பேர் கொண்ட இந்திய அணிக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

இந்த அணியில் வீரர்கள், வீராங்கனைகளுடன் பயிற்சியாளர்கள், உதவிப் பயிற்சியாளர்கள் மற்றும் அணியின் பிற அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். இந்தியா மொத்தம் 10 விளையாட்டுகளில் பங்கேற்கிறது.

இதில் தடகளப் பிரிவில் அதிகபட்சமாக 98 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 46 வீரர்கள், 16 வீராங்கனைகள் மற்றும் 36 உதவிப் பணியாளர்கள் அடங்குவர்.

இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாகச் செயல்பட்டு நாட்டுக்குப் பதக்கங்களை வென்று தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News