பாரிஸ் ஒலிம்பிக் ஆண்களுக்கான ஹாக்கி போட்டி
பாரிஸ் ஒலிம்பிக் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் மொத்தம் 12 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன.இந்திய அணி பி பிரிவில் இடம் பெற்றள்ளது. நீயுசிலாந்து, அயர்லாந்தை வென்ற இந்தியா, அர்ஜென்டினாவுடன் டிரா செய்தது. பெல்ஜியத்திடம் மட்டும் தோல்வியடைந்தது.
லீக் சுற்றில் விளையாடி 5 போட்டியில் 3 வெற்றி, ஒரு டிரா,ஒரு தோல்வி என 10 புள்ளிகளுடன் இந்திய அணி 2வது இடம் பிடித்தது. முடிவில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒலிம்பிக் அரங்கில் 52 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. நாளை நடக்கும் காலிறுதியில் இந்திய அணி, ஏ பிரிவில் 3-வது இடம் பிடிக்கும் ஜெர்மனி , பிரிட்டன், நெதர்லாந்து அணியை எதிர்கொள்ளும்.
0
Leave a Reply