மிளகு சீரக இட்லி
தேவையான பொருட்கள் - இட்லி மாவு -2 கப், பெரிய வெங்காயம் -1. பூண்டு - 4 பல், கறிவேப்பிலை -சிறிது, கெட்டியான புளிச்சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்.
அரைக்க: மிளகு - 2 டீஸ்பூன், சீரகம் ஒரு டீஸ்பூன், பூண்டு 3 பல். தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:இட்லி மாவை, சிறுசிறு இட்லிகளாக ஊற்றி எடுங்கள். மிளகு, சீரகத்தை அரைத்தெடுங்கள். எடுக்கும் தறுவாயில் பூண்டை உரித்து, அதனுடன் வைத்து நசுக்கிக்கொள்ளுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, வெங்காயம், பூண்டைச் சேருங்கள். அத்துடன் சிட்டிகை உப்பு. மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த மிளகு, சீரகம், பூண்டுக் கலவை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி புளிச்சாறு, இட்லி, கறிவேப்பிலை, சிட்டிகை உப்பு சேர்த்து கிளறி இறக்குங்கள். உப்பு, காரம், புளிப்பு சேர்ந்து சப்புக் கொட்ட வைக்கும் இட்லி இது.
0
Leave a Reply